சென்னையில் தொடரும் மழை: கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் நேற்றிரவு தொடங்கி பரவலாக மழை தொடரும் நிலையில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.12) காலை ஆய்வு செய்தார்.
சென்னை: சென்னையில் நேற்றிரவு தொடங்கி பரவலாக மழை தொடரும் நிலையில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.12) காலை ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், “சென்னையில் நேற்றிரவு தொடங்கி மழை பெய்தாலும் எந்தப் பகுதியிலும் பெரிதாக மழைநீர் தேங்கவில்லை. இனிமேல் கனமழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
ஆய்வுக்குப் பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முதலமைச்சர் உத்தரவின்படி கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தோம். மழை நீரை அகற்ற 1499 மோட்டார் பம்புகள், 150 நீர் உறிஞ்சும் இயந்திரம் தயார் நிலையில் உள்ளன. அக்டோபர் மாதம் பெய்த மழைக்கான பணியை காட்டிலும் தற்போதைய மழைக்கு பணியை அதிகமாக்கி உள்ளோம். கூடுதல் மோட்டார்கள் ஏற்பாடு செய்துள்ளோம். சென்னை மாநகராட்சி சார்பில் 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. 120 உணவு தயாரிப்பு மையங்களும் தயாராக உள்ளன. சென்னையில் கணேசபுரம் சுரங்கப்பாதையை மட்டுமே மூடப்பட்டுள்ளது. அதுவும் ரயில்வே மேம்பால பணிக்காக மூடப்பட்டுள்ளது.
What's Your Reaction?