‘குடும்பஸ்தன்’ படக் குழுவினருக்கு கமல் நேரில் பாராட்டு!
'குடும்பஸ்தன்' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் கமல்ஹாசன்.

'குடும்பஸ்தன்' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் கமல்ஹாசன். சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து தமிழகம் திரும்பினார் கமல்ஹாசன். பின்பு திரையுலகப் பணிகள், அரசியல் பணிகள் என பலரையும் சந்தித்து பேசினார். தற்போது ‘குடும்பஸ்தன்’ படக்குழுவினரை நேரில் அழைத்து அப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பாராட்டு தெரிவித்திருக்கிறார் கமல்.
ஜனவரி 24-ம் தேதி வெளியான படம் ‘குடும்பஸ்தன்’. இதனை ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருந்தார். இதில் மணிகண்டன், சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நடுத்தர குடும்பத்தில் உள்ள இளைஞன் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை காமெடி பின்னணியில் கூறிய படமே ‘குடும்பஸ்தன்’.
What's Your Reaction?






