‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என பேட்ச் அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்எல்ஏக்கள்!

தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாள் கூட்டம் இன்று கூடியுள்ள நிலையில், கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ‘கிட்னிகள் ஜாக்கிரதை' என பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர்.

Oct 16, 2025 - 14:11
 0  3
‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என பேட்ச் அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்எல்ஏக்கள்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாள் கூட்டம் இன்று கூடியுள்ள நிலையில், கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக சட்டமன்ற எம்எல்ஏக்கள் ‘கிட்னிகள் ஜாக்கிரதை' என பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று கரூர் துயரம், கிட்னி திருட்டு விவகாரங்களுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். தொடர்ந்து, இரு கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. பின்னர், அதிமுக உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் பாஜக, அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist