சென்னையில் திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்பனை குறித்து ஆய்வு - உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு
கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்டு சிறுவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் ஸ்மோக் பிஸ்கட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் விற்கப்படுகிறதா என்று ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்டு சிறுவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, சென்னையில் ஸ்மோக் பிஸ்கட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் விற்கப்படுகிறதா என்று ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவின் தாவணக்கரை பகுதியில் அண்மையில் சிறுவன் ஒருவன் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பிஸ்கட்டை சாப்பிட்டதும் மூச்சு விடமுடியாமல் வலியால் துடித்தான். உடனடியாக சிறுவனை அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்றினர். எனினும், சிறுவன் வலியால் அலறும் வீடியோ காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தின.
What's Your Reaction?