இஸ்கான் பொதுச் செயலர் கைது: வங்கதேசத்தில் இந்துக்கள் கொந்தளிப்பு - நடந்தது என்ன?
வங்கதேசத்தில் இஸ்கான் பொதுச் செயலாளர் சின்மய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டது, அங்கு இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இந்தியா, சின்மய் கிருஷ்ணதாஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
டாக்கா: வங்கதேசத்தில் இஸ்கான் பொதுச் செயலாளர் சின்மய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டது, அங்கு இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இந்தியா, சின்மய் கிருஷ்ணதாஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. இது பெரும் கலவரமாக வெடித்தது. இதன்காரணமாக கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். அந்த நாட்டில் தற்போது நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி நடத்தி வருகிறது.
What's Your Reaction?