இந்திய முஸ்லிம்கள் குறித்த பதிவு: ஈரான் மதகுருவுக்கு இந்தியா கடும் கண்டனம்

இந்தியாவில் முஸ்லிம்கள் துயரம் அனுபவிப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஈரான் உயர்தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Sep 17, 2024 - 13:17
 0  2
இந்திய முஸ்லிம்கள் குறித்த பதிவு: ஈரான் மதகுருவுக்கு இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: இந்தியாவில் முஸ்லிம்கள் துயரம் அனுபவிப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஈரான் உயர்தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈரான் உயர்தலைவரும் இஸ்லாமிய மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி இன்று (செப்.16) மாலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இஸ்லாமிய சமுதாயத்தின் தனித்துவ அடையாளத்தை அலட்சியப்படுத்த எதிரிகல் முயற்சித்து வருகின்றனர். மியான்மர், காசா, இந்தியா உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துயரங்களை மறந்துவிட்டால் நாம் நம்மை முஸ்லிம்களாகவே கருதமுடியாது” என்று தெரிவித்திருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist