“இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்க லபுஷேனை ஊக்குவிக்கிறோம்” - ஆஸி. பயிற்சியாளர்
மார்னஸ் லபுஷேனின் ஃபார்ம் ஆஸ்திரேலிய அணிக்கு கவலையளித்தாலும் அவருக்குப் பதிலாக வேறு சிறந்த வீரர்கள் அங்கு உள்நாட்டுக் கிரிக்கெட்டில் இல்லை என்பதும் சிக்கலே.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது. பெர்த் டெஸ்ட் மகா உதையை அடுத்து ஆஸ்திரேலியாவின் அடுத்த சிறந்த வீரர் எங்கிருந்து வரப்போகிறார் என்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, மார்னஸ் லபுஷேனின் ஃபார்ம் அந்த அணிக்கு கவலையளித்தாலும் அவருக்குப் பதிலாக வேறு சிறந்த வீரர்கள் அங்கு உள்நாட்டுக் கிரிக்கெட்டில் இல்லை என்பதும் சிக்கலே.
இந்நிலையில், அடிலெய்ட் டெஸ்ட் போட்டிக்கு அணியில் மாற்றம் செய்யப்போவதில்லை என்று கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளமையும் விசித்திரமாகியுள்ளது. மார்னஸ் லபுஷேனிடம் இன்னமும் திறமை பாக்கியிருக்கிறது, அவர் அதை மீட்டெடுப்பார் என்று பயிற்சியாளர் மெக்டொனால்டும், கேப்டன் கம்மின்ஸும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
What's Your Reaction?