அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்பை குறிவைத்து மீண்டும் துப்பாக்கிச் சூடு: மர்ம நபர் கைது
அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக களம் காண்பவருமான டொனால்ட் ட்ரம்ப்பை குறிவைத்து மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.
ஃப்ளோரிடா: அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக களம் காண்பவருமான டொனால்ட் ட்ரம்ப்பை குறிவைத்து மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. இந்தமுறை காயமேதுமின்றி ட்ரம்ப் தப்பியிருந்தாலும் 3 மாதங்களில் இரண்டாவது முறையாக ட்ர்ம்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது அமெரிக்க அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன? அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஞாயிறு மாலை ஃப்ளோரிடாவில் உள்ள கோல்ஃப் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் விளையாடிக் கொண்டிருந்த பகுதியைக் குறிவைத்து 4 ரவுண்ட் துப்பாக்குச் சூடு நடத்தப்பட்டது. உடனடியாக ட்ரம்ப்பின் பாதுகாவலர்கள் துப்பாக்கிக் குண்டுகள் வந்த திசையை நோக்கி தாக்குதலைத் தொடங்கினர். உடனே அங்கிருந்த மர்ம நபர் தான் கொண்டுவந்த உடைமைகளை விட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து காரில் தப்பியுள்ளார்.
What's Your Reaction?