ஹாட்ரிக் முயற்சி... மீண்டும் ஆண்டிபட்டியில் ‘அண்ணனை’ வீழ்த்த தயாராகும் ‘தம்பி’!

மகாராஜன் - லோகிராஜன் சகோதரர்கள் என்றால் ஆண்டிபட்டி அரசியலில் மிகப் பிரபலம். இவர்களில் அண்ணனான மகாராஜன் திமுகவிலும் தம்பியான லோகிராஜன் அதிமுகவிலும் இருக்கிறார்கள்

Oct 14, 2025 - 10:42
 0  6
ஹாட்ரிக் முயற்சி... மீண்டும் ஆண்டிபட்டியில் ‘அண்ணனை’ வீழ்த்த தயாராகும் ‘தம்பி’!

மகாராஜன் - லோகிராஜன் சகோதரர்கள் என்றால் ஆண்டிபட்டி அரசியலில் மிகப் பிரபலம். இவர்களில் அண்ணனான மகாராஜன் திமுகவிலும் தம்பியான லோகிராஜன் அதிமுகவிலும் இருக்கிறார்கள். இரண்டு கட்சிகளுமே கடந்த இரண்டு தேர்தல்களாக இவர்களுக்கு சீட் கொடுத்து மோதவிட்டு வருகிறது. இரண்டு முறையுமே அண்ணன் மகாராஜன் தான் வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறார். ஆனாலும் அசராத தம்பி லோகிராஜன், ஹாட்ரிக் முயற்சியாக இந்தத் தேர்தலிலும் அண்ணனோடு மோத ஆயத்தமாகி வருகிறார்.

இம்முறை தொகுதி தங்களுக்குச் சாதகமாக இருப்பதாகச் சொல்லும் லோகிராஜனின் ஆதரவாளர்கள், "திமுக வில் எம்.பி-யான தங்கதமிழ்ச் செல்வனும் மகாராஜனும் பொது இடத்தில் ஒருமையில் 'நவரசமாய்' பேசிக்கொள்ளும ளவுக்கு ஒருவருக்கு ஒருவர் உள்ளடி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்த பிரச்சினையிலும் இருவரும் நேரடியாக மோதிக் கொண்டனர். அடுத்ததாக, தங்கதமிழ்ச்செல்வன் பிறந்தநாளுக்காக வைக்கப்பட்ட பேனரை கிழித்தும் சிலர் உட்கட்சி மோதலுக்கு உரம்போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இது எங்குபோய் முடியும் என்றும் தெரியவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist