பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னையில் மறியல் போராட்டம்
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சிபிஎஸ் (புதிய ஒய்வூதியம்) ஒழிப்பு இயக்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் சென்னையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சிபிஎஸ் (புதிய ஒய்வூதியம்) ஒழிப்பு இயக்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை எழிலகம் அருகே மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது.
மாநில இணை ஒருங்கிணைப்பாளர் கே.முனியாண்டி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து திருவல்லிக்கேணியில் உள்ள சமூகநலக் கூடத்தில் வைத்திருந்து மாலையில் விடுவித்தனர்.
What's Your Reaction?







