ஸ்ரீ ராம் சமாஜின் பள்ளி கட்டிட வழக்கு: சிஎம்டிஏ, மெட்ரிக் பள்ளி இயக்குநருக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீ ராம் சமாஜ் நடத்தும் பள்ளி கட்டிடத்தை வரைமுறைப்படுத்துவது குறித்து முடிவெடுக்க சிஎம்டிஏ-வுக்கும், கட்டிட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க மெட்ரிக் பள்ளி இயக்குநருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீ ராம் சமாஜ் நடத்தும் பள்ளி கட்டிடத்தை வரைமுறைப்படுத்துவது குறித்து முடிவெடுக்க சிஎம்டிஏ-வுக்கும், கட்டிட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க மெட்ரிக் பள்ளி இயக்குநருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீ ராம் சாமாஜில் தான் வாழ்நாள் உறுப்பினராக இருக்கும், சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த எம்.வி.ரமணி தாக்கல் செய்துள்ள மனுவில், ராம் சமாஜால் கடந்த 1987ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஸ்ரீ சீதாராம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், அரசு வழங்கிய அங்கீகாரம் கடந்த 2012 ஆண்டு மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?







