இ-பைக், வாடகை டூவீலரை தடுக்கக் கோரி புதுச்சேரியில் அக்.1-ல் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்
வாடகை டூவீலர், இ-பைக்கை தடுக்கக்கோரி புதுச்சேரியில் அக்டோபர் 1-ம் தேதி ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக, அனைத்து சங்கத்தினரும் கூட்டாக முடிவெடுத்துள்ளனர்.
புதுச்சேரி: வாடகை டூவீலர், இ-பைக்கை தடுக்கக் கோரி புதுச்சேரியில் அக்டோபர் 1-ம் தேதி ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக, அனைத்து சங்கத்தினரும் கூட்டாக முடிவெடுத்துள்ளனர்.
புதுவை அனைத்து ஆட்டோ சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் முதலியார் பேட்டை சிஐடியு மாநில குழு அலுவலகத்தில் சிஐடியு ஆட்டோ சங்க தலைவர் மணவாளன் தலைமையில் இன்று (செப்.23) நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, ஏடியு, எல்எல்எஃப், புதுச்சேரி மாநில ஆட்டோ ஓட்டுநர் சங்கம், ஐஎன்டியுசி , என்ஆர்டியுசி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
What's Your Reaction?