வரலாற்று சிறப்புமிக்க பயணமாக உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் மோடி
வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார்.
கீவ்: வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் தலைநகர் கீவ்-க்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார்.
உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ளார். தலைநகர் கீவ்-ல் ஜெலன்ஸ்கியைச் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இந்த சந்திப்பின்போது ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
What's Your Reaction?