ரசிகரை கொன்ற வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷன் - யார் இவர்?

தனது காதலியான பவித்ரா கவுடாவை ஆன்லைனில் மிரட்டி தொந்தரவு செய்ததாக கூறி, ரேணுகா சுவாமி என்ற தனது ரசிகரை ஆள் வைத்து கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் மைசூரில் இருந்த அவரை நேற்று (ஜூன் 11) கைது செய்த கர்நாடக காவல்துறை, பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியது. 

Jun 13, 2024 - 11:48
 0  1
ரசிகரை கொன்ற வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷன் - யார் இவர்?

பெங்களூரு: தனது காதலியான பவித்ரா கவுடாவை ஆன்லைனில் மிரட்டி தொந்தரவு செய்ததாக கூறி, ரேணுகா சுவாமி என்ற தனது ரசிகரை ஆள் வைத்து கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் மைசூரில் இருந்த அவரை நேற்று (ஜூன் 11) கைது செய்த கர்நாடக காவல்துறை, பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியது.

7 மணி நேர விசாரணைக்குப் பிறகு, நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களுக்கு 6 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. தர்ஷன் உள்ளிட்ட 12 பேர் இந்த கொலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கர்நாடகாவின் சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி வந்து சித்திரவதை செய்து காமாட்சிபாளையத்தில் வாய்க்காலில் கொன்று வீசியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist