“என் சகோதரி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது...” - ஏ.ஆர்.ரஹ்மானின் நெகிழ்ச்சிப் பதிவு
“என் சகோதரி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது நான் ஸ்டூடியோவில் வேலைப்பார்த்து கொண்டிருந்தேன். என்னால் அந்த நேரத்தில் அங்கு போகமுடியவில்லை” என தனது வேலைபளு குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.
சென்னை: “என் சகோதரி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது நான் ஸ்டூடியோவில் வேலைப்பார்த்து கொண்டிருந்தேன். என்னால் அந்த நேரத்தில் அங்கு போகமுடியவில்லை” என தனது வேலைபளு குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அண்மையில் அவர் அளித்த பேட்டியில், “என்னுடைய சகோதரி கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். அப்போது ஒரு ப்ராஜெக்டை விரைவில் முடிக்க வேண்டி ஸ்டூடியோவில் வேலைப்பார்த்துகொண்டிருந்தேன். அதற்கான டெட்லைன் நெருங்கிவிட்டதால் அங்கே இருந்தேன். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பொருளாதார நெருக்கடியில் இருந்ததால் அந்த வேலையை தள்ளிப்போட முடியவில்லை.
What's Your Reaction?