மாணவர்கள் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்: அமைச்சர் பொன்முடி
‘தமிழக அறிவியல் அறிஞர்’ விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் பொன்முடி, “மாணவர்கள் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
சென்னை: ‘தமிழக அறிவியல் அறிஞர்’ விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் பொன்முடி, “மாணவர்கள் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
உயர்கல்வித் துறையின் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் தமிழக அறிவியல் அறிஞர் விருது வழங்கும் விழா சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று (செப்.23) நடைபெற்றது. உயர்கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் சா.வின்சென்ட் வரவேற்புரை வழங்கினார்.
What's Your Reaction?