திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக பாஜக வலியுறுத்தல்
திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும், என்று தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை: “திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்,” என்று தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி லட்டு பிரசாதம் சர்ச்சை உலகம் முழுவதும் உள்ள இந்து பக்தர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாகவும், போதுமான உள் சோதனை ஆய்வகங்கள் உருவாக்கப்படவில்லை என்றும் பிரசாத பணிகளுக்கான தயாரிப்புகள் முறைப்படி நடக்கவில்லை என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். பக்தர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் விதமாக, ஆந்திர மாநில அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
What's Your Reaction?