கரூர் துயரம்: தவெக மாவட்டச் செயலாளர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனின் ஜாமீன் மனு விசாரணையை மறுதேதி குறிப்பிடாமல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது

கரூர்: கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனின் ஜாமீன் மனு விசாரணையை மறுதேதி குறிப்பிடாமல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கரூர் நகர போலீஸார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
What's Your Reaction?







