லாஸ் ஏஞ்சல்ஸில் தொடரும் பதற்றம்: ஊரடங்கு உத்தரவு அமல்

டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற சோதனைகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக நீடிக்கும் வன்முறை போராட்டங்கள், தீ வைப்பு சம்பவங்களுக்குப் பிறகு, கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல பகுதிகளில் வரையறுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அந்நகரத்தின் மேயர் கரேன் பாஸ் அறிவித்துள்ளார்.

Jun 11, 2025 - 15:57
 0  50
லாஸ் ஏஞ்சல்ஸில் தொடரும் பதற்றம்: ஊரடங்கு உத்தரவு அமல்

லாஸ் ஏஞ்சல்ஸ்: டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற சோதனைகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக நீடிக்கும் வன்முறை போராட்டங்கள், தீ வைப்பு சம்பவங்களுக்குப் பிறகு, கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல பகுதிகளில் வரையறுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அந்நகரத்தின் மேயர் கரென் பாஸ் அறிவித்துள்ளார்.

இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் எனவும், இன்னும் பல நாட்கள் இந்த உத்தரவு அமலில் இருக்கலாம் என்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரென் பாஸ் கூறினார். இருப்பினும், குடியிருப்பாளர்கள் மற்றும் அப்பகுதியில் பணிபுரியும் மக்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு பொருந்தாது என்று அவர் கூறினார். இரவு நேரங்களில் வன்முறை அதிகரித்ததை தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்த இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist