`அட்சயப் பாத்திரத்தைப் பிடுங்கிக் கொண்டு பிச்சைப் பாத்திரத்தைக் கொடுப்பதா..?'- கனிமொழி காட்டம்!
டெல்லி மக்களவையில் தமிழில் பேசிய தி.மு.க மக்களவைக் குழுத்தலைவரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான கனிமொழி, ”மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக உரிய நிதியை பா.ஜ.க அரசு ஒதுக்கவில்லை. கல்விக்காக மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மத்திய அரசு குறைத்து கொண்டே வருகிறது. கல்விக்காக அதிக நிதி ஒதுக்குவது மாநில அரசுகள்தான். அதே மாநில அரசுகள்தான் கல்விக்காக 50% நிதியை வழங்குகின்றன. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் மாநிலத்துக்கு நிதி தருவோம் என கூற மத்திய அரசுக்கு அதிகாரம் தந்தது யார்? கனிமொழிமணிமேகலையின் கையில் இருக்கும் அட்சய பாத்திரத்தை பிடுங்கிக்கொண்டு பிச்சை பாத்திரத்தை கொடுப்பதுபோல் உள்ளது மத்திய அரசின்பட்ஜெட். தமிழ்நாட்டிற்கு கல்விக்கு உரிய நிதி ஒதுக்கவில்லை. குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது மாநில உரிமைகள் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இப்போது மாநில உரிமைகளை பறிக்கிறார். பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் தற்போது காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அமல்படுத்தியுள்ளார்.மதிய உணவுத் திட்ட நிதியை மத்திய அரசு குறைத்தது ஏன்? குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அரசின் திட்டங்கள் அமைந்துள்ளது. இந்தியுடன் சேர்த்து சமஸ்கிருதத்தையும் திணித்து வருகிறது மத்திய அரசு. குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? நீட் தேர்வின் மூலம் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை மத்திய அரசு சிதைக்கிறது. மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு என்பது தேவையில்லை.கனிமொழி நீட் தேர்வை கொண்டு வந்ததன் மூலம் பயிற்சி மையங்கள் மட்டுமே பயன் பெறுகின்றன. நீட் தேர்வைக் கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவக் கனவுகளை ஒன்றிய அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது. ’சாதி’ என்ற கட்டமைப்பை ஒழிக்க வேண்டும் என்று காலம் காலமாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். சாதியை வலியுறுத்தும் பிரதமர் தலைமையில் இயற்றப்படும் கல்வி திட்டத்தை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. ஒருவரின் சாதி என்ன என்று தெரிந்து கொள்வதில் என்ன பெருமை உள்ளது? சாதியற்றவர்களாக வாழ்வதில்தான் பெருமை உள்ளது” எனக் கூறியுள்ளார்.விகடன் வேண்டுகோள்: வயநாடு பேரழிவு... கண்ணீர் துடைக்க, கரங்கள் கோப்போம்!
டெல்லி மக்களவையில் தமிழில் பேசிய தி.மு.க மக்களவைக் குழுத்தலைவரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான கனிமொழி, ”மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக உரிய நிதியை பா.ஜ.க அரசு ஒதுக்கவில்லை. கல்விக்காக மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மத்திய அரசு குறைத்து கொண்டே வருகிறது. கல்விக்காக அதிக நிதி ஒதுக்குவது மாநில அரசுகள்தான். அதே மாநில அரசுகள்தான் கல்விக்காக 50% நிதியை வழங்குகின்றன. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் மாநிலத்துக்கு நிதி தருவோம் என கூற மத்திய அரசுக்கு அதிகாரம் தந்தது யார்?
மணிமேகலையின் கையில் இருக்கும் அட்சய பாத்திரத்தை பிடுங்கிக்கொண்டு பிச்சை பாத்திரத்தை கொடுப்பதுபோல் உள்ளது மத்திய அரசின்பட்ஜெட். தமிழ்நாட்டிற்கு கல்விக்கு உரிய நிதி ஒதுக்கவில்லை. குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது மாநில உரிமைகள் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இப்போது மாநில உரிமைகளை பறிக்கிறார். பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் தற்போது காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அமல்படுத்தியுள்ளார்.
மதிய உணவுத் திட்ட நிதியை மத்திய அரசு குறைத்தது ஏன்? குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அரசின் திட்டங்கள் அமைந்துள்ளது. இந்தியுடன் சேர்த்து சமஸ்கிருதத்தையும் திணித்து வருகிறது மத்திய அரசு. குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? நீட் தேர்வின் மூலம் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை மத்திய அரசு சிதைக்கிறது. மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு என்பது தேவையில்லை.
நீட் தேர்வை கொண்டு வந்ததன் மூலம் பயிற்சி மையங்கள் மட்டுமே பயன் பெறுகின்றன. நீட் தேர்வைக் கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவக் கனவுகளை ஒன்றிய அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது. ’சாதி’ என்ற கட்டமைப்பை ஒழிக்க வேண்டும் என்று காலம் காலமாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். சாதியை வலியுறுத்தும் பிரதமர் தலைமையில் இயற்றப்படும் கல்வி திட்டத்தை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. ஒருவரின் சாதி என்ன என்று தெரிந்து கொள்வதில் என்ன பெருமை உள்ளது? சாதியற்றவர்களாக வாழ்வதில்தான் பெருமை உள்ளது” எனக் கூறியுள்ளார்.
What's Your Reaction?