‘2026-ல் தே.ஜ.கூட்டணியைச் சேர்ந்தவர் தான் தமிழக முதல்வராக இருப்பார்’ - நாராயணன் திருப்பதி
2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்தவர் தான் தமிழக முதல்வராக இருப்பார்’ என பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.
தேவகோட்டை: “2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்தவர் தான் தமிழக முதல்வராக இருப்பார்” என பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நேற்றிரவு பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நன்றி அறிவிப்பு மற்றும் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர அமைப்பாளர் இறகுசேரி காசிராஜா தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி, பொதுச் செயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
What's Your Reaction?