தொழில் வரி, தொழில் உரிமக் கட்டண உயர்வை ரத்து செய்க: ஓபிஎஸ் வலியுறுத்தல்

தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம் மற்றும் விளையாட்டுப் போட்டி மற்றும் பயிற்சிக் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய முன்வரவேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Aug 2, 2024 - 10:14
 0  0
தொழில் வரி, தொழில் உரிமக் கட்டண உயர்வை ரத்து செய்க: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம் மற்றும் விளையாட்டுப் போட்டி மற்றும் பயிற்சிக் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய முன்வரவேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே பொதுமக்களிடமிருந்து எந்தெந்த வழியில் வரி வசூலிக்கலாம் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறதேயொழிய, பொதுமக்களின் நிதிச் சுமையை குறைப்பது பற்றி துளிகூட சிந்திப்பதில்லை. பொதுமக்களுக்கு நிம்மதியை உருவாக்கித் தரவேண்டிய ஓர் அரசு வழிப்பறிக் கொள்ளையர்போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist