`லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்ணை, மனைவியாக அங்கீகரிக்க உரிமை' - மதுரை ஐகோர்ட் உத்தரவு சொல்வதென்ன?

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஒரு பெண்ணை காதலித்தார்.  இருவருடைய காதலையும் பெற்றோர்கள் ஏற்று கொள்ளவில்லை. இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர்.இதையடுத்து பெண் மாயமானதாக பெண்ணின் தந்தை புகாரளித்ததால் பெண்ணை அவரின் வீட்டில் ஒப்படைத்தார் பிரபாகரன்.கலப்புத் திருமணம் செய்துகொண்டால், இருவரையும் கொன்றுவிடுவோம் என பிரபாகரனின் உறவினர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் பிரபாகரன் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் உறவு வைத்து விட்டு ஏமாற்றியதாக பிரபாகரன் மீது அந்த பெண் மணப்பாறை மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிந்தார்.இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பிரபாகரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி கூறியதாவது, “மனுதாரர் திருமணம் செய்வதாக உறுதியளித்து பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். பின்னர் ஏமாற்றியுள்ளார். இப்போதும் திருமணம் செய்ய மறுத்து வருகிறார்.லிவ் இன் ரிலேஷன்ஷிப்தற்போது பெருகி வரும் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ முறையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் நவீனத்துவம் மற்றும் கலாச்சாரம் என்ற வலையில் சிக்கிக் கொள்கின்றனர். இந்த உறவில் இருக்கும் ஆண்கள் திடீரென்று பெண்களின் குணநலன்களைக் குற்றம்சாட்டி வேறு நிலைப்பாட்டை எடுக்கின்றனர். இந்த வழக்கில் நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்ய முயன்றது. திருமணம் ஒரு தீர்வாக அமையாத போது, ஜீவனாம்சம் அல்லது பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீடு வழங்குவதன் மூலம் இந்த சிக்கலைத் தீர்க்க நீதிமன்றம் முயன்றது. பாதிக்கப்பட்ட பெண், அதற்கு உடன்பட்டால் பணத்திற்காக உறவு கொண்டதாக முத்திரை குத்திவிடுவார்கள் என்று கூறி மறுத்து விட்டார். பெண்ணின் இந்த நடவடிக்கை பிரச்னையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.நீதிமன்றம் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் உறவு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனைவியாக அங்கீகரிக்கப்பட உரிமை உண்டு. மனுதாரர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதற்காக அவர் மீது பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 69-ன் கீழ் வழக்கு பதிய வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் மனுதாரரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம். எனவே, மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளார்.

Jan 21, 2026 - 16:43
 0  10
`லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்ணை, மனைவியாக அங்கீகரிக்க உரிமை' - மதுரை ஐகோர்ட் உத்தரவு சொல்வதென்ன?

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஒரு பெண்ணை காதலித்தார்.  இருவருடைய காதலையும் பெற்றோர்கள் ஏற்று கொள்ளவில்லை. இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர்.

இதையடுத்து பெண் மாயமானதாக பெண்ணின் தந்தை புகாரளித்ததால் பெண்ணை அவரின் வீட்டில் ஒப்படைத்தார் பிரபாகரன்.

கலப்புத் திருமணம் செய்துகொண்டால், இருவரையும் கொன்றுவிடுவோம் என பிரபாகரனின் உறவினர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் பிரபாகரன் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் உறவு வைத்து விட்டு ஏமாற்றியதாக பிரபாகரன் மீது அந்த பெண் மணப்பாறை மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிந்தார்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பிரபாகரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி கூறியதாவது, “மனுதாரர் திருமணம் செய்வதாக உறுதியளித்து பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். பின்னர் ஏமாற்றியுள்ளார். இப்போதும் திருமணம் செய்ய மறுத்து வருகிறார்.

லிவ் இன் ரிலேஷன்ஷிப்

தற்போது பெருகி வரும் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ முறையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் நவீனத்துவம் மற்றும் கலாச்சாரம் என்ற வலையில் சிக்கிக் கொள்கின்றனர். இந்த உறவில் இருக்கும் ஆண்கள் திடீரென்று பெண்களின் குணநலன்களைக் குற்றம்சாட்டி வேறு நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

 இந்த வழக்கில் நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்ய முயன்றது. திருமணம் ஒரு தீர்வாக அமையாத போது, ஜீவனாம்சம் அல்லது பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீடு வழங்குவதன் மூலம் இந்த சிக்கலைத் தீர்க்க நீதிமன்றம் முயன்றது. பாதிக்கப்பட்ட பெண், அதற்கு உடன்பட்டால் பணத்திற்காக உறவு கொண்டதாக முத்திரை குத்திவிடுவார்கள் என்று கூறி மறுத்து விட்டார். பெண்ணின் இந்த நடவடிக்கை பிரச்னையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.

நீதிமன்றம்

திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் உறவு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனைவியாக அங்கீகரிக்கப்பட உரிமை உண்டு. மனுதாரர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதற்காக அவர் மீது பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 69-ன் கீழ் வழக்கு பதிய வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் மனுதாரரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம். எனவே, மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist