'NDA-க்கு முதலமைச்சர் யாருன்னு உங்களுக்கே தெரியும்; தெரிந்தே கேட்கிறீர்கள்!' - டிடிவி தினகரன் பதில்

என்.டி.ஏ கூட்டணியில் இணைவதாக அறிவித்திருக்கிறார் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணியை உறுதி செய்த டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.டிடிவிபியூஸ் கோயல் பேசியதாவது, ``தனிப்பட்ட முறையில் தினகரன் கூட்டணிக்கு வந்ததில் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஊழல் நிறைந்த நிர்வாக திறனற்ற திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். அதற்காக ஒரு குடும்பமாக செயல்படுவோம். ஆன்டி இந்தியா கூட்டணியை தோற்கடிப்போம்ஸ்டாலின், உதயநிதி, சபரீசனின் ஊழல் சாம்ராஜ்யத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் இந்த தருணத்தில் நினைவு கூறுகிறோம்' என்றார். NDAடிடிவி தினகரன் பேசுகையில், 'மீண்டும் என்.டி.ஏவில் இணைந்ததில் மகிழ்ச்சி. தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம்.திராவிட மாடல், கஞ்சா மாடல் ஆட்சியை ஒழிப்போம். என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். தெரிந்தே என்னிடம் கேட்கிறீர்கள்தமிழக மக்களின் நலனுக்காகவும் அமமுகவின் நலனுக்காகவும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையெல்லாம் மறந்து முழு மனதோடு வந்திருக்கிறோம். சீட்டு எண்ணிக்கையைப் பற்றி எதுவும் பேசவில்லை' என்றார்.

Jan 21, 2026 - 16:43
 0  10
'NDA-க்கு முதலமைச்சர் யாருன்னு உங்களுக்கே தெரியும்; தெரிந்தே  கேட்கிறீர்கள்!' - டிடிவி தினகரன் பதில்

என்.டி.ஏ கூட்டணியில் இணைவதாக அறிவித்திருக்கிறார் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணியை உறுதி செய்த டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

டிடிவி
டிடிவி

பியூஸ் கோயல் பேசியதாவது, ``தனிப்பட்ட முறையில் தினகரன் கூட்டணிக்கு வந்ததில் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஊழல் நிறைந்த நிர்வாக திறனற்ற திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். அதற்காக ஒரு குடும்பமாக செயல்படுவோம். ஆன்டி இந்தியா கூட்டணியை தோற்கடிப்போம்

ஸ்டாலின், உதயநிதி, சபரீசனின் ஊழல் சாம்ராஜ்யத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.

எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் இந்த தருணத்தில் நினைவு கூறுகிறோம்' என்றார்.

NDA
NDA

டிடிவி தினகரன் பேசுகையில், 'மீண்டும் என்.டி.ஏவில் இணைந்ததில் மகிழ்ச்சி.

தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம்.

திராவிட மாடல், கஞ்சா மாடல் ஆட்சியை ஒழிப்போம்.

என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். தெரிந்தே என்னிடம் கேட்கிறீர்கள்

தமிழக மக்களின் நலனுக்காகவும் அமமுகவின் நலனுக்காகவும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையெல்லாம் மறந்து முழு மனதோடு வந்திருக்கிறோம். சீட்டு எண்ணிக்கையைப் பற்றி எதுவும் பேசவில்லை' என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist