ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி எனக்கு உறுதியளித்துள்ளார்: ட்ரம்ப்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

Oct 16, 2025 - 14:10
 0  4
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி எனக்கு உறுதியளித்துள்ளார்: ட்ரம்ப்

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று மோடி எனக்கு உறுதியளித்தார். உங்களுக்குத் தெரியும், இதை உடனடியாக செய்ய முடியாது. இது ஒரு சிறிய செயல்முறை, ஆனால் செயல்முறை விரைவில் முடிவடையும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist