ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 6 மாதம் சிறை தண்டனை

தீ​பாவளிப் பண்​டிகை நெருங்​கும் நிலை​யில், ரயி​லில் பட்​டாசு எடுத்​துச் சென்​றால், 6 மாதம் சிறைத் தண்​டனை விதிக்​கப்​படும் என்று ரயில்வே நிர்​வாகம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

Oct 14, 2025 - 10:42
 0  10
ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 6 மாதம் சிறை தண்டனை

சென்னை: தீ​பாவளிப் பண்​டிகை நெருங்​கும் நிலை​யில், ரயி​லில் பட்​டாசு எடுத்​துச் சென்​றால், 6 மாதம் சிறைத் தண்​டனை விதிக்​கப்​படும் என்று ரயில்வே நிர்​வாகம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. தீபாவளிப் பண்​டிகை வரும் 20-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. பண்​டிகையை ஒட்டி சொந்த ஊர்​களுக்கு செல்​லும்​போது, பேருந்​து, ரயில்​களில் பட்​டாசுகளை எடுத்​துச் செல்ல முயற்சி செய்​வார்​கள். குறிப்​பாக, ரயில்​களில் பட்​டாசுகள் எடுத்​துச் செல்​வதைத் தடுக்க ஆர்​பிஎஃப் போலீ​ஸார் தீவிர சோதனை​யில் ஈடு​படு​வது வழக்​கம்.

அந்த வகை​யில், தீபாவளிப் பண்​டிகையை ஒட்​டி, ரயி​லில் பட்​டாசுகளை எடுத்​துச்​செல்​வதை தடுக்க தீவிர சோதனை விரை​வில் தொடங்க உள்​ளது. ரயி​லில் பட்​டாசு எடுத்​துச்​செல்​வது கண்​டு​பிடிக்​கப்​பட்​டால், கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று ஆர்​பிஎஃப் போலீ​ஸார் எச்​சரிக்கை விடுத்​துள்​ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist