மு.க.ஸ்டாலின் மக்கள் நலன்களை பலி கொடுத்து செந்தில் பாலாஜியை பாதுகாக்க முயல்கிறார்: அன்புமணி

ஊழல் வழக்கிலிருந்து செந்தில் பாலாஜியை காப்பாற்ற திமுக அரசு முயல்வதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதனால மக்களிடம்  முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Jul 30, 2025 - 16:57
 0  58
மு.க.ஸ்டாலின் மக்கள் நலன்களை பலி கொடுத்து செந்தில் பாலாஜியை பாதுகாக்க முயல்கிறார்: அன்புமணி

சென்னை: ஊழல் வழக்கிலிருந்து செந்தில் பாலாஜியை காப்பாற்ற திமுக அரசு முயல்வதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால மக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வேலைக்கு பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் இருந்து அவரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் தான், அந்த வழக்கில் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த அப்பாவிகள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேரை அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக திமுக அரசு சேர்த்திருக்கிறது என்றும், இது நீதி வழங்கும் அமைப்பின் மீது நடத்தப்படும் மோசடி என்றும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist