பட்டாசு ஆலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்த செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

விருதுநகர் தீ விபத்தில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

Jun 11, 2025 - 15:57
 0  45
பட்டாசு ஆலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்த செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை: “பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்தாத காரணத்தால் தான் இத்தகைய விபத்துக்கள் ஏற்படுகின்றன. தொழிற்சாலை ஒழுங்குமுறை நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. இதுபோன்ற அலட்சியப் போக்கு குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும்” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

விருதுநகர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பெண்கள் உட்பட 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist