தைவானை புரட்டிப் போட்ட அதி தீவிர புயல்: ஏரி உடைப்பில் சிக்கி 14 பேர் பலி; 124 பேர் மாயம்

தைவானில் அதி தீவிர புயல் மற்றும் கனமழையால் பழமையான ஏரியில் உடைப்பு ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்தனர், 124 பேர் காணாமல் போயினர்.

Sep 25, 2025 - 10:47
 0  6
தைவானை புரட்டிப் போட்ட அதி தீவிர புயல்: ஏரி உடைப்பில் சிக்கி 14 பேர் பலி; 124 பேர் மாயம்

தைபே: தைவானை தாக்கிய அதி தீவிரப் புயல் மற்றும் கனமழையால் பழமையான ஏரியில் உடைப்பு ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்தனர், 124 பேர் காணாமல் போயினர்.

‘ரகாசா’ அதி தீவிரப் புயல் பலத்த மழையுடன் தைவானை தாக்கிய நிலையில், நேற்று கிழக்கு ஹுவாலியன் கவுண்டியில் உள்ள ஒரு பழமையான ஏரி உடைந்து, ஒரு பாலத்தை அடித்துச் சென்றது. இதனால் அடர்த்தியான சேறு மற்றும் சகதியுடனான தண்ணீர் நகரத்துக்குள் புகுந்தது. இதனால் அந்த நகரத்தில் உள்ள வீடுகளின் முதல் தளம் வரை சேறும், சகதியும் சூழ்ந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist