தீபாவளி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கூடாரம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், எழும்பூர் ரயில் நிலையத்தின் முன்பக்கத்தில் காத்திருக்கும் பயணிகளுக்காக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், எழும்பூர் ரயில் நிலையத்தின் முன்பக்கத்தில் காத்திருக்கும் பயணிகளுக்காக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் மத்திய, தென் மாவட்டங்களுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் 50-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.
இதுதவிர, எழும்பூர் ரயில் நிலையம் வழியாக மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, இந்த நிலையத்துக்கு தினசரி ஒரு லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.
What's Your Reaction?







