திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம் வழங்கப்பட்டு  விடுமா? - அன்புமணி கண்டனம்

கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளது. திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம் வழங்கப்பட்டு விடுமா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Jul 30, 2025 - 16:57
 0  44
திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம் வழங்கப்பட்டு  விடுமா? - அன்புமணி கண்டனம்

சென்னை: “சென்னை அண்ணா நகரில் கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றி படுகொலை செய்துள்ளனர். திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம் வழங்கப்பட்டு விடுமா?” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை அண்ணாநகர் திருமங்கலம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நித்தின் சாய் என்ற கல்லூரி மாணவர் கொடூரமான முறையில் காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார. அவருடன் பயணித்த இன்னொரு மாணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist