“தவெகவை முடக்க திமுக முயற்சி; விரைவில் உண்மை வெளிவரும்” - ஆதவ் அர்ஜுனா
தவெகவை முடக்க திமுக முயற்சிக்கிறது. ஆனால், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விரைவில் உண்மை வெளிவரும் என்று தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: தவெகவை முடக்க திமுக முயற்சிக்கிறது. ஆனால், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விரைவில் உண்மை வெளிவரும் என்று தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது: தவெக தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதான் நான் தொடர்ந்த வழக்கு. பிறர் வழக்கு தொடர்ந்தது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
What's Your Reaction?







