கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது தமிழக காவல் துறையை அவமதிக்கும் செயல்: சீமான்

கரூர் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றம் என்பது தமிழக காவல்துறையை அவமதிக்கும் செயல் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்

Oct 13, 2025 - 17:19
 0  1
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது தமிழக காவல் துறையை அவமதிக்கும் செயல்: சீமான்

சென்னை: கரூர் வழக்கு விசாரணை, சிபிஐக்கு மாற்றம் என்பது தமிழக காவல் துறையை அவமதிக்கும் செயல் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

செப்.27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு உத்தரவை எதிர்த்து தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வாதங்களை கேட்ட நீதிபதிகள், இன்று அளித்த தீர்ப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist