ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: மாணவர்கள் உள்பட 8 பேர் பலி
ஆஸ்திரியா நாட்டின் கிராஸ் நகரில் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உள்பட 8 உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மர்ம நபரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வியன்னா: ஆஸ்திரியா நாட்டின் கிராஸ் நகரில் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மர்ம நபரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கிராஸ் நகரில் ஒரு பள்ளியில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அது ஓர் உயர்நிலைப் பள்ளி எனத் தெரிகிறது. திடீரென்று பள்ளியின் ஒரு பகுதியிலிருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக வகுப்பறைகளில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சிதறி ஓடினர். சில மணித்துளிகள் களேபரத்துக்குப் பின்னர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். பள்ளியில் உள்ள கழிவறைகளில் ஒன்றில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவர்தான் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
What's Your Reaction?







