அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமானால் ட்ரம்ப் காசா போரை நிறுத்த வேண்டும்: பிரான்ஸ் அதிபர்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல விரும்பினால், அவர் காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறினார்.

பாரிஸ்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல விரும்பினால், அவர் காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறினார்.
நேற்று ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மேக்ரான், “காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் ட்ரம்ப்புக்கு மட்டுமே உள்ளது. இந்த மோதலில் ஏதாவது செய்யக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டுமே.
What's Your Reaction?







