ஹர்மன்பிரீத்தின் 2 கோல்களால் அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி | பாரிஸ் ஒலிம்பிக்

ஒலிம்பிக்கின் இன்றைய ஆடவருக்கான ஹாக்கி போட்டியில் 2-0 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி. ஹர்மன்பிரீத் சிங்கின் கோலால் இந்த வெற்றி சாத்தியமானது. 

Jul 31, 2024 - 10:06
 0  1
ஹர்மன்பிரீத்தின் 2 கோல்களால் அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி | பாரிஸ் ஒலிம்பிக்

பாரிஸ்: ஒலிம்பிக்கின் இன்றைய ஆடவருக்கான ஹாக்கி போட்டியில் 2-0 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி. ஹர்மன்பிரீத் சிங்கின் கோலால் இந்த வெற்றி சாத்தியமானது.

செவ்வாய்கிழமை நடைபெற்ற ‘பி’ பிரிவு ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. 11-வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் முதல் கோல் அடித்து உற்சாகமூட்டினார். அடுத்து 19-வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. இதுவரை 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. மூன்று போட்டிகளின் முடிவில் 7 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist