``விடாமுயற்சியாக காங்கிரஸை கட்டிக்காக்கும் ராகுல் காந்தி..!" - மீண்டும் செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூதன்னுடைய மதுரை மேற்குத் தொகுதியில் நலத்திட்ட கட்டுமானப் பணியை தொடங்கி வைத்த செல்லூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என ஏற்கனவே கூறி விட்டோம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் புறக்கணிப்பது குறித்து ஏற்கனவே தெளிவாக கூறி விட்டோம், திமுக, சட்டத்துக்கு புறம்பாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் செயல்படும் என்பதால் தேர்தலை புறக்கணித்து இருக்கிறோம். அப்புறம் எப்படி எங்களை பாஜகவின் பீ டீம் என கூற முடியும் ? பாமக, விக்கிரவாண்டியில் தைரியமாக போட்டியிடவில்லை, அத்தொகுதியில் பாமக-வுக்கு உள்ள வாக்கு வங்கியை தெரிந்து கொள்வதற்காக தேர்தலில் போட்டியிடுகிறது. விக்கிரவாண்டியில் பாமக வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா? என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு, காங்கிரஸை கட்டி காக்க ராகுல் காந்தி விடாமுயற்சி எடுத்து வருகிறார், ராகுல் காந்திக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.செல்லூர் ராஜூ - ராகுல் காந்திதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மமதையில் பேசி வருகிறது, கூட்டணி கட்சிகள் இல்லாமல் திமுக தேர்தலில் தனித்து போட்டியிடத் தயாரா? திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் உதயசூரியன் சின்னம் அல்லாமல் தனி சின்னத்தில் போட்டியிடத் தயாரா?2026 தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். மக்களுக்காக திமுக சாதனை திட்டங்களை கொண்டு வந்திருந்தால் தனித்தே போட்டியிடலாமே?" என்றார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
தன்னுடைய மதுரை மேற்குத் தொகுதியில் நலத்திட்ட கட்டுமானப் பணியை தொடங்கி வைத்த செல்லூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என ஏற்கனவே கூறி விட்டோம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் புறக்கணிப்பது குறித்து ஏற்கனவே தெளிவாக கூறி விட்டோம், திமுக, சட்டத்துக்கு புறம்பாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் செயல்படும் என்பதால் தேர்தலை புறக்கணித்து இருக்கிறோம். அப்புறம் எப்படி எங்களை பாஜகவின் பீ டீம் என கூற முடியும் ?
பாமக, விக்கிரவாண்டியில் தைரியமாக போட்டியிடவில்லை, அத்தொகுதியில் பாமக-வுக்கு உள்ள வாக்கு வங்கியை தெரிந்து கொள்வதற்காக தேர்தலில் போட்டியிடுகிறது. விக்கிரவாண்டியில் பாமக வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா? என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு, காங்கிரஸை கட்டி காக்க ராகுல் காந்தி விடாமுயற்சி எடுத்து வருகிறார், ராகுல் காந்திக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மமதையில் பேசி வருகிறது, கூட்டணி கட்சிகள் இல்லாமல் திமுக தேர்தலில் தனித்து போட்டியிடத் தயாரா? திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் உதயசூரியன் சின்னம் அல்லாமல் தனி சின்னத்தில் போட்டியிடத் தயாரா?
2026 தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். மக்களுக்காக திமுக சாதனை திட்டங்களை கொண்டு வந்திருந்தால் தனித்தே போட்டியிடலாமே?" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
What's Your Reaction?