வங்கதேச டெஸ்ட் போட்டி: அயர்லாந்து 270 ரன் சேர்ப்பு
டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. பால் ஸ்டிர்லிங் 60, கேட் கார்மைக்கேல் 59, கர்திஷ் கேம்பர் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்

சைல்ஹெட்: வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. பால் ஸ்டிர்லிங் 60, கேட் கார்மைக்கேல் 59, கர்திஷ் கேம்பர் 44, லார்கன் டக்கர் 41, ஜோர்டான் நெய்ல் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
What's Your Reaction?







