“யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை” - கரூரில் நிர்மலா சீதாராமன் கருத்து

கரூர் கூட்ட நெரிசல் உயி​ரிழப்பு விவ​காரத்​தில் யாரை​யும் குற்​றம்​சாட்ட விரும்​ப​வில்லை என்று மத்​திய அமைச்​சர் நிர்மலா சீதா​ராமன் கூறி​னார்.

Sep 30, 2025 - 10:59
 0  4
“யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை” - கரூரில் நிர்மலா சீதாராமன் கருத்து

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயி​ரிழப்பு விவ​காரத்​தில் யாரை​யும் குற்​றம்​சாட்ட விரும்​ப​வில்லை என்று மத்​திய அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறி​னார். கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு மத்​திய அமைச்​சர்​கள் நிர்​மலா சீதா​ராமன், எல்​.​முரு​கன் ஆகியோர் நேற்று ஆறு​தல் கூறினர். மேலும், சம்​பவம் நடை​பெற்ற வேலுசாமிபுரத்​துக்கு சென்று பார்​வை​யிட்​டனர்.

பின்​னர், ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நிர்​மலா சீதா​ராமன் கூறிய​தாவது: நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்​கும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரு​வோருக்​கும் ஆறு​தல் கூறு​வதற்​காக பிரதமர் மோடி எங்​களை இங்கு அனுப்பி வைத்​தார். அதன்​படி, பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரை சந்​தித்து ஆறு​தல் கூறினோம். இதில் பலர் பேசக்​கூட முடி​யாத அளவுக்கு துக்​கத்​தில் உள்​ளனர். இதில் பெரும்​பாலானவர்​கள் ஏழை மக்​கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist