மதுரையில் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை பணி தீவிரம்: பூத்தில் 200 பேரை சேர்த்தால் கேடயம் பரிசு
அதிக உறுப்பினர்களை சேர்க்கும் பூத் நிர்வாகிகளுக்கு வீடுகளுக்கே சென்று மத்திய அமைச்சர் மற்றும் மாநில நிர்வாகிகளைக் கொண்டு கேடயம் பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுரையில் பாஜக உறுப்பினர்கள் சேர்ப்பு தீவிரமடைந்துள்ளது
மதுரை: அதிக உறுப்பினர்களை சேர்க்கும் பூத் நிர்வாகிகளுக்கு வீடுகளுக்கே சென்று மத்திய அமைச்சர் மற்றும் மாநில நிர்வாகிகளைக் கொண்டு கேடயம் பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுரையில் பாஜக உறுப்பினர்கள் சேர்ப்பு தீவிரமடைந்துள்ளது.
நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் செப்.1-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. பழைய உறுப்பினர்கள் புதுப்பித்துக் கொள்ளவும், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும் கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மண்டலம் வாரியாக பொறுப்பாளர்கள் நியமித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது 200 உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும், தீவிர உறுப்பினர்களாக சேர்பவர்கள் ஒவ்வொருவரும் 50 பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?