புதுவையில் விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட மூவர் பலி

புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவரது பாட்டி செந்தாமரை (72).  இவர் இன்று காலை வீட்டில் உள்ள கழிப்பறைக்கு சென்றபோது மயங்கி விழுந்தார். உடனே அவரது மகள் காமாட்சி (55), செந்தாமரையை தூக்கச் சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார்.

Jun 11, 2024 - 12:20
 0  1
புதுவையில் விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட மூவர் பலி

புதுச்சேரி: புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவரது பாட்டி செந்தாமரை (72). இவர் இன்று காலை வீட்டில் உள்ள கழிப்பறைக்கு சென்றபோது மயங்கி விழுந்தார். உடனே அவரது மகள் காமாட்சி (55), செந்தாமரையை தூக்கச் சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார்.

இதைப் பார்த்த பேத்தி பாக்கியலட்சுமி கழிப்பறைக்குச் சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார். இது குறித்து புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மூவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே செந்தாமரையும் காமாட்சியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist