கரூர் துயரம்: ``100% சதி, இது எவ்வளவு தவறானது என்பதை இன்று நிரூபித்துள்ளோம்'' - ஆதவ் அர்ஜுனா
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் பயணத்தை மேற்கொண்டார். அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிபிஐ விசாரிக்க உத்தரவு வழங்கியதுடன், விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "வலி மிகுந்த நாட்களில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் வாயில் இருந்து வார்த்தைகள் கூட முழுமையாக வர முடியவில்லை."விஜய் பிரசாரம் கரூர் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைவருடைய சுற்றுப்பயணம் மிகப்பெரிய எழுச்சியாக உருவானது.இது முதல் கூட்டம் கிடையாது, திருச்சி, நாமக்கல், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம் என பல ஊர்களுக்கு செல்லும்போது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத எழுச்சியை மக்கள் உருவாக்கினர்.ஆனால் உண்மையைப் பதிவு செய்ய வேண்டும். எந்த மாவட்டத்திலும் காவல்துறை ஆதரவு வழங்கியது இல்லை. அரியலூரில் மட்டும் வழங்கினார்கள். எங்களுக்கு பெரம்பலூர் எஸ். பி பல தகவல்களை வழங்கினார். அதனால் கடைசி நேரத்தில் அதை ரத்து செய்தோம்.கரூர் விஜய் பிரசாரம்நாங்கள் நல்லபடியாக நாமக்கல் பிரச்சார பயணத்தை முடித்துவிட்டு, காவல்துறை சொன்ன 3 முதல் 10 மணி வரை என்ற உரிய நேரத்தில் கரூர் சென்றோம். எங்களுடைய நேரலையை எல்லா ஊடகங்களுக்கும் கொடுத்திருக்கிறோம். தலைவர் எங்கிருந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் தலைவர் தாமதமாக வந்தார் என்ற அபாண்டமான குற்றச்சாட்டை எங்கள் மீது வைக்கின்றனர். கரூரில் காவல்துறையினர் தான் எங்களை வரவேற்றார்கள். எந்த மாவட்டத்திலும் இப்படி நடக்கவில்லை. அவர்கள்தான் திட்டமிட்ட இடத்தில் நின்று பேசுங்கள் என்று சொன்னார்கள். தலைவர் எல்லாமே வசதியாக இருக்கிறதா என கேட்டுவிட்டுத்தான் மேலே எழுந்து பேச ஆரம்பித்தார்.ஏற்பாட்டில் தவறுகள் இருந்தால் ஏன் காவல்துறை எல்லையிலேயே எங்களை வரவேற்க வேண்டும் என்பது எங்கள் முதல் கேள்வி. பேசும்போது தலைவர் மக்களைப் பார்த்துத்தான் பேசினார். எங்கே தண்ணீர் கேட்டார்களோ அங்கே அவர் கையாலேயே தண்ணீர் கொடுத்தார். ஆம்புலன்சுக்கு அவரே வழிவிட சொன்னார். மக்களைப் பார்த்துவிட்டு, அவரால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பேச்சை முடித்துவிட்டு கிளம்பினார்." எனப் பேசினார்.கரூர் துயரம்: `விசாரணை முடியட்டும்; யார் தவறு என்பது தெரிந்துவிடும்' சிபிஐ விசாரிக்க அதிரடி உத்தரவுதமிழக அரசு நடத்தும் விசாரணைமேலும், "இந்த இடத்தை காவல்துறையினர் எவ்வளவு போர்ஸ் பண்ணி தவெகவிடம் கொடுத்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் கொடுப்போம். எங்களுக்கு ஏன் தமிழக அரசின் மீதும் தமிழக அரசு நடத்தும் விசாரணை மீதும் நம்பிக்கை இல்லை என்றால், தவெகவினர் ஓடிவிட்டார்கள் என சொல்கிறார்கள். எங்களது மொபைல் சிக்னலை ட்ராக் செய்யலாம், கரூர் எல்லையில் நான், பொதுச் செயலாளர் நிர்மல் குமார், அருண்ராஜ் அவர்கள் எல்லோரும் காத்திருந்தோம். காவல்துறை நீங்கள் வந்தால் கலவரம் வரும் நிறைய பிரச்னை வரும் என வலியுறுத்தினார்கள். அதையும் நாங்கள் தாக்கல் செய்வோம். தமிழக வெற்றிக் கழகம் அங்கே வரக்கூடாது என்பதற்காக ஒட்டுமொத்த கட்சியினரையும் தடியடி நடத்தி தீவிரவாதிகள் மாதிரி அடித்து அனுப்பினார்கள் என்பதை நாங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்வோம். `இந்த சந்தர்பத்தை பயன்படுத்தினார்கள்'நாங்களும் மனிதர்கள்தான். 25 வருஷம் 60 வருஷம் இருக்கும் அரசியல்வாதிகள் கிடையாது. இந்த இழப்புக்குப் பிறகு முதல் 3,4 நாட்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாது. எங்கள் உறவுகள் இழந்துவிட்டு நாங்கள் மீடியாவில் வந்து பேசிக்கொண்டிருக்க மாட்டோம். இந்த சந்தர்பத்தை திமுக பயன்படுத்தியது. அன்று முழுவதும் என்ன நாடகம் ஆடினார்கள் என்பது மக்களுக்கு தெரியும். அடுத்த நாள்களில் நீதிமன்ற விடுமுறை என்பதால் அதோடு நாங்கள் சட்ட ரீதியாக போராட முடியாது, இதுவொரு திட்டமிட்ட சதி. கரூர் நெரிசல் - தவெக வழக்கு`தமதமாகத்தான் இதை உணர்ந்தோம்' உண்மையைக் கூறிய யூடியூபர்கள் கைது செய்யப்பட்டனர். சமூக வலைதளங்களில் பேசியவர்கள் கைது செய்யப்பட்டனர். ஏனென்றால் உண்மையின் ஒருபக்கம் மட்டுமே தெரிய வேண்டும். அவர்கள் மட்டுமே பேச வேண்டும் என நினைத்தார்கள். அரசு செய்தி தொடர்புத் துறை ஒரு வாரத்துக்கு தவெக மீது எப்படி பொய் குற்றச்சாட்டுகளை சொல்லலாம் என்பதை மட்டும் தான் பார்த்தது. இந்த பிரச்னையை வைத்து திமுக அரசு ஒட்டுமொத்த கட்சியை முடக்க திட்டமிட்டு இருக்கிறது என்பதை தமதமாகத்தான் உணர்ந்தோம்.`குற்றச்சாட்டாக அல்ல'இதை வெறும் குற்றச்சாட்டாக அல்ல ஆதரத்துடன் பதிவு செய்கிறேன். அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை அமைக்கப்பட்ட பிறகு எப்படி உயர் அதிகாரிகள் வந்து அரசு மீது எந்த தவறும் இல்லை என சொல்கின்றனர். Home secretary, high secretary தவெகவை நேரடியாக குற்றம்சாட்டாமல் அவர்கள் பக்க நியாயத்தை மட்டும் பேசினார்கள். அப்பறம் எதுக்கு விசாரணை ஆணையத்தை உருவாக்கினார்கள்.உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை பதிவு செய்தார்கள். அதில் தலைவரின் பெயர் கூட இல்லை. ஆனால் அவரது தலைமை பண்பு, அரசியல் வருகை என கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்தார்கள். எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் நாங்கள்தான் தவறு செய்தோம் என்று அவர் பதிவு செய்துவிட்டார். இதன் பிறகு அந்த நீதிபதி அமைத்துள்ள SIT வெளிப்படைத் தன்மையுடனும் நியாயமாக இருக்கும் என எப்படி நம்ப முடியும். ஆதவ் அர்ஜுனாசென்னை உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வந்தது கிடையாது.இந்த தீர்ப்புக்கு பிறகு தான் எங்களுக்கு புரிந்தது திமுக அதன் கட்சி பலத்தை பயன்படுத்தாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தி தமிழக வெற்றிக் கழகத்தை எப்படி முடக்க முடியும், எங்கள் தலைவரை எப்படி முடக்க முடியும், எங்கள் பிரசாரத்தை எப்படி முடக்க முடியும்... நேற்றுகூட
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் பயணத்தை மேற்கொண்டார். அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிபிஐ விசாரிக்க உத்தரவு வழங்கியதுடன், விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா,
"வலி மிகுந்த நாட்களில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் வாயில் இருந்து வார்த்தைகள் கூட முழுமையாக வர முடியவில்லை."
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைவருடைய சுற்றுப்பயணம் மிகப்பெரிய எழுச்சியாக உருவானது.
இது முதல் கூட்டம் கிடையாது, திருச்சி, நாமக்கல், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம் என பல ஊர்களுக்கு செல்லும்போது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத எழுச்சியை மக்கள் உருவாக்கினர்.
ஆனால் உண்மையைப் பதிவு செய்ய வேண்டும். எந்த மாவட்டத்திலும் காவல்துறை ஆதரவு வழங்கியது இல்லை. அரியலூரில் மட்டும் வழங்கினார்கள்.
எங்களுக்கு பெரம்பலூர் எஸ். பி பல தகவல்களை வழங்கினார். அதனால் கடைசி நேரத்தில் அதை ரத்து செய்தோம்.
நாங்கள் நல்லபடியாக நாமக்கல் பிரச்சார பயணத்தை முடித்துவிட்டு, காவல்துறை சொன்ன 3 முதல் 10 மணி வரை என்ற உரிய நேரத்தில் கரூர் சென்றோம்.
எங்களுடைய நேரலையை எல்லா ஊடகங்களுக்கும் கொடுத்திருக்கிறோம். தலைவர் எங்கிருந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் தலைவர் தாமதமாக வந்தார் என்ற அபாண்டமான குற்றச்சாட்டை எங்கள் மீது வைக்கின்றனர்.
கரூரில் காவல்துறையினர் தான் எங்களை வரவேற்றார்கள். எந்த மாவட்டத்திலும் இப்படி நடக்கவில்லை. அவர்கள்தான் திட்டமிட்ட இடத்தில் நின்று பேசுங்கள் என்று சொன்னார்கள்.
தலைவர் எல்லாமே வசதியாக இருக்கிறதா என கேட்டுவிட்டுத்தான் மேலே எழுந்து பேச ஆரம்பித்தார்.
ஏற்பாட்டில் தவறுகள் இருந்தால் ஏன் காவல்துறை எல்லையிலேயே எங்களை வரவேற்க வேண்டும் என்பது எங்கள் முதல் கேள்வி.
பேசும்போது தலைவர் மக்களைப் பார்த்துத்தான் பேசினார். எங்கே தண்ணீர் கேட்டார்களோ அங்கே அவர் கையாலேயே தண்ணீர் கொடுத்தார்.
ஆம்புலன்சுக்கு அவரே வழிவிட சொன்னார். மக்களைப் பார்த்துவிட்டு, அவரால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பேச்சை முடித்துவிட்டு கிளம்பினார்." எனப் பேசினார்.
தமிழக அரசு நடத்தும் விசாரணை
மேலும், "இந்த இடத்தை காவல்துறையினர் எவ்வளவு போர்ஸ் பண்ணி தவெகவிடம் கொடுத்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் கொடுப்போம்.
எங்களுக்கு ஏன் தமிழக அரசின் மீதும் தமிழக அரசு நடத்தும் விசாரணை மீதும் நம்பிக்கை இல்லை என்றால், தவெகவினர் ஓடிவிட்டார்கள் என சொல்கிறார்கள்.
எங்களது மொபைல் சிக்னலை ட்ராக் செய்யலாம், கரூர் எல்லையில் நான், பொதுச் செயலாளர் நிர்மல் குமார், அருண்ராஜ் அவர்கள் எல்லோரும் காத்திருந்தோம்.
காவல்துறை நீங்கள் வந்தால் கலவரம் வரும் நிறைய பிரச்னை வரும் என வலியுறுத்தினார்கள். அதையும் நாங்கள் தாக்கல் செய்வோம்.
தமிழக வெற்றிக் கழகம் அங்கே வரக்கூடாது என்பதற்காக ஒட்டுமொத்த கட்சியினரையும் தடியடி நடத்தி தீவிரவாதிகள் மாதிரி அடித்து அனுப்பினார்கள் என்பதை நாங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்வோம்.
`இந்த சந்தர்பத்தை பயன்படுத்தினார்கள்'
நாங்களும் மனிதர்கள்தான். 25 வருஷம் 60 வருஷம் இருக்கும் அரசியல்வாதிகள் கிடையாது. இந்த இழப்புக்குப் பிறகு முதல் 3,4 நாட்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாது. எங்கள் உறவுகள் இழந்துவிட்டு நாங்கள் மீடியாவில் வந்து பேசிக்கொண்டிருக்க மாட்டோம்.
இந்த சந்தர்பத்தை திமுக பயன்படுத்தியது. அன்று முழுவதும் என்ன நாடகம் ஆடினார்கள் என்பது மக்களுக்கு தெரியும். அடுத்த நாள்களில் நீதிமன்ற விடுமுறை என்பதால் அதோடு நாங்கள் சட்ட ரீதியாக போராட முடியாது, இதுவொரு திட்டமிட்ட சதி. 
`தமதமாகத்தான் இதை உணர்ந்தோம்'
உண்மையைக் கூறிய யூடியூபர்கள் கைது செய்யப்பட்டனர். சமூக வலைதளங்களில் பேசியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஏனென்றால் உண்மையின் ஒருபக்கம் மட்டுமே தெரிய வேண்டும். அவர்கள் மட்டுமே பேச வேண்டும் என நினைத்தார்கள்.
அரசு செய்தி தொடர்புத் துறை ஒரு வாரத்துக்கு தவெக மீது எப்படி பொய் குற்றச்சாட்டுகளை சொல்லலாம் என்பதை மட்டும் தான் பார்த்தது. இந்த பிரச்னையை வைத்து திமுக அரசு ஒட்டுமொத்த கட்சியை முடக்க திட்டமிட்டு இருக்கிறது என்பதை தமதமாகத்தான் உணர்ந்தோம்.
`குற்றச்சாட்டாக அல்ல'
இதை வெறும் குற்றச்சாட்டாக அல்ல ஆதரத்துடன் பதிவு செய்கிறேன். அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை அமைக்கப்பட்ட பிறகு எப்படி உயர் அதிகாரிகள் வந்து அரசு மீது எந்த தவறும் இல்லை என சொல்கின்றனர்.
Home secretary, high secretary தவெகவை நேரடியாக குற்றம்சாட்டாமல் அவர்கள் பக்க நியாயத்தை மட்டும் பேசினார்கள். அப்பறம் எதுக்கு விசாரணை ஆணையத்தை உருவாக்கினார்கள்.
உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை பதிவு செய்தார்கள். அதில் தலைவரின் பெயர் கூட இல்லை. ஆனால் அவரது தலைமை பண்பு, அரசியல் வருகை என கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்தார்கள்.
எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் நாங்கள்தான் தவறு செய்தோம் என்று அவர் பதிவு செய்துவிட்டார். இதன் பிறகு அந்த நீதிபதி அமைத்துள்ள SIT வெளிப்படைத் தன்மையுடனும் நியாயமாக இருக்கும் என எப்படி நம்ப முடியும். 
சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வந்தது கிடையாது.
இந்த தீர்ப்புக்கு பிறகு தான் எங்களுக்கு புரிந்தது திமுக அதன் கட்சி பலத்தை பயன்படுத்தாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தி தமிழக வெற்றிக் கழகத்தை எப்படி முடக்க முடியும், எங்கள் தலைவரை எப்படி முடக்க முடியும், எங்கள் பிரசாரத்தை எப்படி முடக்க முடியும்... நேற்றுகூட ஒரு மாவட்ட செயலாளர் கைது. கட்சியை முடக்கும் ஜனநாயக படுகொலையை பயன்படுத்தி சட்டம் ஒழுங்கைப் பயன்படுத்திச் செய்கிறது திமுக அரசு.
இந்த நிலையில் தான் தலைவர் அவர்கள் அறிவுறுத்தல் பெயரில் டெல்லிக்கு கிளம்பி வந்தோம்.
எங்களுக்கு வழக்கறிஞர் கிடைக்கக் கூடாது என்பதற்காகவும் செயல்பட்டனர். ஆனால் நாங்கள் மூத்த வழக்கறிஞர்களை சந்தித்து எங்கள் நியாயத்தை எடுத்துக்கூறி வாதாடி வருகிறோம்.
இன்னைக்கு காலைகூட பல வதந்திகள். நாங்கள் தவறாக மனுதாக்கல் செய்துள்ளோம் என்று, ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரே மனு தலைவர் வழிகாட்டுதலில் எனது பெயரில் பதிவு செய்துள்ளது மட்டும்தான். எங்கள் அமைதிக்குப் பிறகு இந்த தீர்ப்பு மூலம் எங்கள் உறவுகள் 41 பேரின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்கும்.
100% இதில் சதி இருக்கிறது. அதை குற்றச்சாட்டாக இல்லாமல் நீதித்துறை மூலம் அணுக நினைத்தோம். ஒரு வாரத்துக்கு நாங்கள் தான் குற்றவாளி என்பதுபோல மீடியா மூலம் சித்தரித்தார்கள். அதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வளவு தவறானது என்பதை இன்று நிரூபித்துள்ளோம்." என்றும் பேசினார்.
What's Your Reaction?







