‘கடவுளின் திட்டம்’ - மனம் திறக்கும் ஷபாலி வர்மா | Women’s WC
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி.

நவிமும்பை: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. இதன் மூலம் உலகக் கோப்பை தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றியில் தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மாவின் மட்டை வீச்சும் பிரதான பங்கு வகித்தது. 78 பந்துகளை சந்தித்த அவர், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் விளாசி மிரட்டினார். இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய இளம் வீராங்கனை என்ற சாதனையையும் அவர், படைத்தார்.
What's Your Reaction?







