அமெரிக்கா: அதிகாரியால் விபத்தில் கொல்லப்பட்ட இந்திய மாணவி; ரூ. 260 கோடி இழப்பீடு வழங்க முடிவு

அமெரிக்காவில் காவல் துறை அதிகாரியால் கொல்லப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த மாணவி ஜாஹ்னவி கண்டூலாவின் குடும்பத்திற்கு, சியாட்டில் நகரம் $29 மில்லியன் (சுமார் ₹262 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.23 வயதான ஜாஹ்னவி கண்டுலா, சியாட்டிலில் உள்ள Northeastern University-யில் தகவல் அமைப்பு துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வந்தார். 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சியாட்டில் நகர சாலையைக் கடக்கும்போது காவல் துறை அதிகாரி கெவின் டேவ் இயக்கிய ரோந்து வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.ஜாஹ்னவி கண்டுலாவிசாரணையில், 25 மைல் வேக வரம்பு கொண்ட பகுதியில் அதிகாரி மணிக்கு 74 மைல் வேகத்தில் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. அவர் போதை மருந்துக் கடத்தல் குறித்த அழைப்பு வந்ததை அடுத்து இந்த வேகத்தில் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், அவர் சென்றபோது அவசரகால விளக்குகளையும் சைரனையும் பயன்படுத்தியுள்ளார்.உடன் இருந்த மற்றொரு அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவில், ஜாஹ்னவியின் உயிரை அவமதிக்கும் வகையில் சிரித்துக்கொண்டு இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகியதையடுத்து பல போராட்டங்கள் வெடித்தன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து 2025ல் விபத்தை ஏற்படுத்திய அதிகாரி கெவின் டேவ் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக $5,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் குற்றவியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப் போதிய ஆதாரம் இல்லை என்று கிங் கவுண்டி வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில், கண்டூலாவின் குடும்பத்திற்கு, சியாட்டில் நகரம் $29 மில்லியன் (சுமார் ₹262 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.ஜாஹ்னவி கண்டுலா“ஜாஹ்னவி கண்டுலாவின் மரணம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. இந்த நிதி தீர்வு அவரது குடும்பத்திற்கு ஓரளவு மனநிறைவைத் தரும் என நம்புகிறோம். அவரது வாழ்க்கை குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் முக்கியமானது,” என்று நகர வழக்கறிஞர் எரிகா எவன்ஸ் தெரிவித்துள்ளார்.2023-ல் நடந்த இந்தச் சம்பவம், 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சட்ட நடவடிக்கை முடிவுக்கு வந்ததையடுத்து அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்த காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.கல்லாதது உலகளவு 1: மத்திய கிழக்கில் போர் மேகங்கள்; அமெரிக்கா மீண்டும் ஈரானை ஏன் தாக்கத் துடிக்கிறது?

Feb 19, 2026 - 18:59
 0  6
அமெரிக்கா: அதிகாரியால் விபத்தில் கொல்லப்பட்ட இந்திய மாணவி; ரூ. 260 கோடி இழப்பீடு வழங்க முடிவு

அமெரிக்காவில் காவல் துறை அதிகாரியால் கொல்லப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த மாணவி ஜாஹ்னவி கண்டூலாவின் குடும்பத்திற்கு, சியாட்டில் நகரம் $29 மில்லியன் (சுமார் ₹262 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

23 வயதான ஜாஹ்னவி கண்டுலா, சியாட்டிலில் உள்ள Northeastern University-யில் தகவல் அமைப்பு துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சியாட்டில் நகர சாலையைக் கடக்கும்போது காவல் துறை அதிகாரி கெவின் டேவ் இயக்கிய ரோந்து வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

ஜாஹ்னவி கண்டுலா
ஜாஹ்னவி கண்டுலா

விசாரணையில், 25 மைல் வேக வரம்பு கொண்ட பகுதியில் அதிகாரி மணிக்கு 74 மைல் வேகத்தில் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. அவர் போதை மருந்துக் கடத்தல் குறித்த அழைப்பு வந்ததை அடுத்து இந்த வேகத்தில் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், அவர் சென்றபோது அவசரகால விளக்குகளையும் சைரனையும் பயன்படுத்தியுள்ளார்.

உடன் இருந்த மற்றொரு அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவில், ஜாஹ்னவியின் உயிரை அவமதிக்கும் வகையில் சிரித்துக்கொண்டு இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகியதையடுத்து பல போராட்டங்கள் வெடித்தன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதனை அடுத்து 2025ல் விபத்தை ஏற்படுத்திய அதிகாரி கெவின் டேவ் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக $5,000 அபராதம் விதிக்கப்பட்டது. 

ஆனால் குற்றவியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப் போதிய ஆதாரம் இல்லை என்று கிங் கவுண்டி வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கண்டூலாவின் குடும்பத்திற்கு, சியாட்டில் நகரம் $29 மில்லியன் (சுமார் ₹262 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

ஜாஹ்னவி கண்டுலா
ஜாஹ்னவி கண்டுலா

“ஜாஹ்னவி கண்டுலாவின் மரணம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. இந்த நிதி தீர்வு அவரது குடும்பத்திற்கு ஓரளவு மனநிறைவைத் தரும் என நம்புகிறோம். அவரது வாழ்க்கை குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் முக்கியமானது,” என்று நகர வழக்கறிஞர் எரிகா எவன்ஸ் தெரிவித்துள்ளார்.

2023-ல் நடந்த இந்தச் சம்பவம், 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சட்ட நடவடிக்கை முடிவுக்கு வந்ததையடுத்து அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்த காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist