அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கோ கோ காஃப் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன்களான நோவக் ஜோகோவிச், கோகோ காஃப் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
சென்னை: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன்களான நோவக் ஜோகோவிச், கோகோ காஃப் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 3-வது நாளில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சகநாட்டைச் சேர்ந்த லாஸ்லோ டிஜெரேவை எதிர்த்து விளையாடினார். இதில் ஜோகோவிச் 6-4, 6-4, 2-0 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்தபோது காயம் காரணமாக லாஸ்லோ விலகினார். இதனால் ஜோகோவிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்கஓபன் டென்னிஸ் தொடர்களில் ஜோகோவிச்சின் 90-வது வெற்றியாக இது அமைந்தது.
What's Your Reaction?