"OPS-ன் காலதாமதம்... திமுக தமிழ்நாட்டிற்குத் தேவை" - திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சொல்வது என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. கட்சி மாறுதல், கூட்டணி மாறுதல், கூட்டணிப் பேச்சுவார்த்தை போன்றவற்றுக்கு இனி பஞ்சமிருக்காது.அதில் ஒருவர்தான், இன்று திமுகவில் இணைந்துள்ள ஒரத்தநாடு எம்.எல்.ஏ வைத்திலிங்கம்.அதிமுகவின் சீனியர், முன்னாள் அமைச்சர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் என அதிமுகவின் மிக முக்கியமானவராக இருந்தவர் வைத்திலிங்கம்.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா Vs ஓ.பன்னீர்செல்வம் என்கிற நிலை வந்தபோது, இவர் ஓ.பி.எஸ்ஸை டிக் செய்தார்.வைத்திலிங்கம்ஆளுநர் வெளிநடப்பு: "நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் வெளியேற முடியுமா?" - அப்பாவு கேள்விபின்னர் ஓ.பி.எஸ் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் இணைந்தபோதும், ஓ.பி.எஸ்ஸிற்குத் தூணாகவே நின்றார்.இ.பி.எஸ், ஓ.பி.எஸிக்குத் தலைமைச் சண்டை வந்து இருவரும் பிரிய, அப்போது ஓ.பி.எஸ்ஸுடனேயே தொடர்ந்தார்.ஆனால், இப்போது திமுகவில் சேர்ந்துள்ளார் வைத்திலிங்கம்.இன்று காலை சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்து தனது ஒரத்தநாடு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் இவர். அடுத்தது, அறிவாலயம் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு திமுகவில் இணைந்துள்ளார்.அதன் பின், அவர் பேசியதாவது..."அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்குவது சிறப்பானதாக இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செய்து வருகிறார் முதலமைச்சர். அதிமுகவில் இருந்து விலகினாலும், அண்ணா தோற்றுவித்த தாய்க் கழகத்தில் இணைந்துள்ளேன். தேர்தல் விரைவில் வருகிறது. முடிவுகளைச் சீக்கிரம் எடுக்க வேண்டும். ஆனால், அது கால தாமதமானது. அதனால், ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளேன். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம்'ஆளுநரின் மைக் 'அப்படி' ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம்' - அப்பாவு| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVEஅதிமுக சுதந்திரமாகச் செயல்படவில்லை. சர்வாதிகரமாகச் செயல்படுகிறது.ஓ.பி.எஸ் திமுகவில் இணைவாரா என்பது குறித்து அவரைத்தான் கேட்க வேண்டும்.என்னைத் தனிப்பட்ட முறையில், அதிமுகவில் இணைய அழைத்தார்கள். ஆனால், அதிமுக ஒட்டுமொத்தமாக ஒன்றாக இணைந்தால்தான், அதிமுகவில் சேருவேன் என்று கூறினேன். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை எனக்குப் பிடிக்கவில்லை.தமிழ்நாட்டிற்கு இப்போது தேவை திமுக" என்று பேசியுள்ளார்.மருது அழகுராஜ், அன்வார் ராஜா, மைத்ரேயன், பி.எச்.பாண்டியன் வரிசையில் தற்போது வைத்திலிங்கம். அடுத்து யாரோ?

Jan 21, 2026 - 16:43
 0  11
"OPS-ன் காலதாமதம்... திமுக தமிழ்நாட்டிற்குத் தேவை" - திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சொல்வது என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. கட்சி மாறுதல், கூட்டணி மாறுதல், கூட்டணிப் பேச்சுவார்த்தை போன்றவற்றுக்கு இனி பஞ்சமிருக்காது.

அதில் ஒருவர்தான், இன்று திமுகவில் இணைந்துள்ள ஒரத்தநாடு எம்.எல்.ஏ வைத்திலிங்கம்.

அதிமுகவின் சீனியர், முன்னாள் அமைச்சர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் என அதிமுகவின் மிக முக்கியமானவராக இருந்தவர் வைத்திலிங்கம்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா Vs ஓ.பன்னீர்செல்வம் என்கிற நிலை வந்தபோது, இவர் ஓ.பி.எஸ்ஸை டிக் செய்தார்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

பின்னர் ஓ.பி.எஸ் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் இணைந்தபோதும், ஓ.பி.எஸ்ஸிற்குத் தூணாகவே நின்றார்.

இ.பி.எஸ், ஓ.பி.எஸிக்குத் தலைமைச் சண்டை வந்து இருவரும் பிரிய, அப்போது ஓ.பி.எஸ்ஸுடனேயே தொடர்ந்தார்.

ஆனால், இப்போது திமுகவில் சேர்ந்துள்ளார் வைத்திலிங்கம்.

இன்று காலை சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்து தனது ஒரத்தநாடு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் இவர். அடுத்தது, அறிவாலயம் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு திமுகவில் இணைந்துள்ளார்.

அதன் பின், அவர் பேசியதாவது...

"அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்குவது சிறப்பானதாக இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செய்து வருகிறார் முதலமைச்சர்.

அதிமுகவில் இருந்து விலகினாலும், அண்ணா தோற்றுவித்த தாய்க் கழகத்தில் இணைந்துள்ளேன்.

தேர்தல் விரைவில் வருகிறது. முடிவுகளைச் சீக்கிரம் எடுக்க வேண்டும். ஆனால், அது கால தாமதமானது. அதனால், ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளேன்.

வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம்
வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக சுதந்திரமாகச் செயல்படவில்லை. சர்வாதிகரமாகச் செயல்படுகிறது.

ஓ.பி.எஸ் திமுகவில் இணைவாரா என்பது குறித்து அவரைத்தான் கேட்க வேண்டும்.

என்னைத் தனிப்பட்ட முறையில், அதிமுகவில் இணைய அழைத்தார்கள். ஆனால், அதிமுக ஒட்டுமொத்தமாக ஒன்றாக இணைந்தால்தான், அதிமுகவில் சேருவேன் என்று கூறினேன். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை எனக்குப் பிடிக்கவில்லை.

தமிழ்நாட்டிற்கு இப்போது தேவை திமுக" என்று பேசியுள்ளார்.

மருது அழகுராஜ், அன்வார் ராஜா, மைத்ரேயன், பி.எச்.பாண்டியன் வரிசையில் தற்போது வைத்திலிங்கம். அடுத்து யாரோ?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist