Anura Kumara: "இனம், மதம் எனப் பிரிவில்லாத, பன்முகத்தன்மையான இலங்கை.." - அநுர குமார திசாநாயக்க உறுதி

"சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக, பேர்கராக, மலேயராக இருந்தாலும் அனைவருக்கும் 'நாம் இலங்கைப் பிரஜைகள்' என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறை சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை அதற்காக அரசியலமைப்பு ரீதியான, பொருளாதார, அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்..." என்று புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க பேசியுள்ளார்.அநுர குமாரஇலங்கை மக்களுக்கு புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க ஆற்றிய முதல் சிறப்புரையில், "பிக்குமார்களே, மதத் தலைவர்களே, பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, பிள்ளைகளே...பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராகச் செவி சாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக இருந்த இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம். எங்கள் வேலைத்திட்டத்தில் உடன்படாத தரப்பினர் கூட நாங்கள் அடைந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைந்தால் மாத்திரமே நீங்கள் அளித்த இந்த வெற்றி மேலும் பலமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.எனவே, இந்த வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். நமது அரசியல் இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, பல்வேறு அவதூறுகளையும், பொய்யான, திரிபு படுத்தப்பட்ட தகவல்களையும் ஒதுக்கி விட்டு, புதிய பரிசோதனைக்கு அஞ்சாமல், எமது அரசியல் இயக்கத்திற்கு நமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வழங்கும் அளவிற்குப் பெரும் உறுதியுடன் இருந்த அனைத்து மக்களுக்கும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்குத் தோள் கொடுப்பதற்கான பலம் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.அநுர குமார திசாநாயக்கஇந்த வெற்றிக்காக எனக்கு முன்னரும், எங்களுடனும் பலவிதமான தியாகங்களைச் செய்த, சில சமயங்களில் தங்கள் உயிரைக்கூடத் தியாகம் செய்த விலைமதிப்பற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் நாங்கள் மரியாதையுடன் நினைவுகூருகிறோம். இந்த வெற்றியையும், அதன் மூலம் கட்டியெழுப்பப்படும் வளமான நாட்டையும் அவர்களுக்கு அளிக்கும் கௌரவமாகவே நான் கருதுகிறேன்.இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான பங்கைக் கூட்டுச்செயற்பாடாக நிறைவேற்றும் திறன் எமக்கு உள்ளது. அதற்கான மிகத் திறமையான குழு எங்களிடம் உள்ளது. நம் அனைவருக்கும் அது குறித்த முழுமையான உறுதிப்பாடு உள்ளது. நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு முன்னதாக பொருளாதாரத்தை நிரந்தரமான நிலைக்கு உயர்த்துவது அவசியம் என நம்புகிறோம்.நாம் எதிர்பார்க்கும் மாற்றத்திற்காகக் குறிப்பிட்ட காலத்திற்குள் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவை அனைத்தும் தற்போதைய பொருளாதாரத்தில் ஸ்திர நிலையையும் நம்பிக்கையும் கட்டியெழுப்புவதில் மாத்திரமே தங்கியுள்ளது. அதற்காகச் சர்வதேச நாணய நிதியத்துடன் துரிதமாகப் பேச்சுவார்த்தை ஆரம்பித்து நீடிக்கப்பட்ட கடன் வசதியுடன் தொடர்புள்ள விஷயங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்.அநுர குமார திசாநாயக்கஎனக்கு அதிகாரத்தைக் கையளிக்கையில் 'மாற்றம்' ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணக் கருவே மக்களிடத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது. மாற்றம் என நமது நாட்டு மக்கள் கருதுவது அரசியல் முறைமையில் காணப்படும் அனைத்து விதமான மோசமான பண்புகளை மாற்றுவதே ஆகும். தற்போது அது நிரூபணமாகியுள்ளது. இந்த நாட்டில் நடைபெற்ற அனைத்து விதமான தேர்தல்களையும் நோக்கினால், தேர்தலுக்குப் பின்னரான எந்த வன்முறைச் சம்பவமும் நடைபெறாத ஒரேயொரு தேர்தலாக நாம் வெற்றிபெற்ற இந்தத் தேர்தலை வரலாற்றில் இணைக்க முடிந்துள்ளது.இது நமது நாட்டு மக்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. இந்நிலைமையை உறுதிப்படுத்தி நிலைப்படுத்துவது நமது நோக்கமாகும். அரசியலில் அதிகாரத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கும் அதற்காக வியூகம் அமைப்பதற்கும் எவருக்கும் உரிமையுள்ளது. அரசியல் செய்யும் நேரத்தில் அரசியல் செய்வதற்கும், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரத்தில் அதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் இந்த தருணத்தில் வலியுறுத்துகிறேன். அதற்கான தலைமைத்துவத்தை நாம் வழங்குகிறோம்.சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பேர்கராக இருந்தாலும், மலேயராக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் 'நாம் இலங்கைப் பிரஜைகள்' என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறை சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை, இந்த நாடு தோல்வியடையுமே தவிர வெற்றியடையாது. அதற்காக அரசியலமைப்பு ரீதியான, பொருளாதார, அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒரு போதும் நாம் பின்வாங்க மாட்டோம்.தனது இனம், தனது மதம், தனது வர்க்கம், தனது சாதி என இந்த நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம்.இந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கும் செயல்படுத்தவும் செயல்திறன் மிக்க, நேர்மையான அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே நிறைவு செய்துள்ளோம். பொதுப் பணிக்கு இடையூறு ஏற்படாத மற்றும் பிரஜைகள் தொடர்பில் பாதகமான அழுத்தங்கள் ஏற்படாத வகையில் எதிர்பார்த்த மாற்றங்களைப் படிப்படியாக மேற்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணக்கருவை மீள உயிர்ப்பிப்போம்.அநுர குமார திசாநாயக்கஇந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே எனது எதிர்பார்ப்பு. அதற்கான நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது." என்று அனைத்து துறை சார்ந்த விஷயங்களையும் ஆய்ந்து உரையாற்றியவர், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வீதிகளில் வாகனங்கள் செல்லும் விதம், முதியோர்களை நடத்தும் விதம், விருந்தோம்பல் செய்யும் முறை, விலங்குகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதையும் உறுதிப்படுத்த முடியும். நம் நாட்டின் பிம்பத்தை அதே வகையில் தெளிவாகத் தெரியும் வகையில் கட்டியெழுப்ப நாம் திட்டங்களைத் தயாரித்து முடித்துள்ளோம். அந்த உர

Sep 26, 2024 - 09:49
 0  9
Anura Kumara: "இனம், மதம் எனப் பிரிவில்லாத, பன்முகத்தன்மையான இலங்கை.." - அநுர குமார திசாநாயக்க உறுதி

"சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக, பேர்கராக, மலேயராக இருந்தாலும் அனைவருக்கும் 'நாம் இலங்கைப் பிரஜைகள்' என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறை சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை அதற்காக அரசியலமைப்பு ரீதியான, பொருளாதார, அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்..." என்று புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க பேசியுள்ளார்.

அநுர குமார

இலங்கை மக்களுக்கு புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க ஆற்றிய முதல் சிறப்புரையில், "பிக்குமார்களே, மதத் தலைவர்களே, பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, பிள்ளைகளே...

பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராகச் செவி சாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக இருந்த இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம். எங்கள் வேலைத்திட்டத்தில் உடன்படாத தரப்பினர் கூட நாங்கள் அடைந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைந்தால் மாத்திரமே நீங்கள் அளித்த இந்த வெற்றி மேலும் பலமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

எனவே, இந்த வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். நமது அரசியல் இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, பல்வேறு அவதூறுகளையும், பொய்யான, திரிபு படுத்தப்பட்ட தகவல்களையும் ஒதுக்கி விட்டு, புதிய பரிசோதனைக்கு அஞ்சாமல், எமது அரசியல் இயக்கத்திற்கு நமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வழங்கும் அளவிற்குப் பெரும் உறுதியுடன் இருந்த அனைத்து மக்களுக்கும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்குத் தோள் கொடுப்பதற்கான பலம் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

அநுர குமார திசாநாயக்க

இந்த வெற்றிக்காக எனக்கு முன்னரும், எங்களுடனும் பலவிதமான தியாகங்களைச் செய்த, சில சமயங்களில் தங்கள் உயிரைக்கூடத் தியாகம் செய்த விலைமதிப்பற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் நாங்கள் மரியாதையுடன் நினைவுகூருகிறோம். இந்த வெற்றியையும், அதன் மூலம் கட்டியெழுப்பப்படும் வளமான நாட்டையும் அவர்களுக்கு அளிக்கும் கௌரவமாகவே நான் கருதுகிறேன்.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான பங்கைக் கூட்டுச்செயற்பாடாக நிறைவேற்றும் திறன் எமக்கு உள்ளது. அதற்கான மிகத் திறமையான குழு எங்களிடம் உள்ளது. நம் அனைவருக்கும் அது குறித்த முழுமையான உறுதிப்பாடு உள்ளது. நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு முன்னதாக பொருளாதாரத்தை நிரந்தரமான நிலைக்கு உயர்த்துவது அவசியம் என நம்புகிறோம்.

நாம் எதிர்பார்க்கும் மாற்றத்திற்காகக் குறிப்பிட்ட காலத்திற்குள் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவை அனைத்தும் தற்போதைய பொருளாதாரத்தில் ஸ்திர நிலையையும் நம்பிக்கையும் கட்டியெழுப்புவதில் மாத்திரமே தங்கியுள்ளது. அதற்காகச் சர்வதேச நாணய நிதியத்துடன் துரிதமாகப் பேச்சுவார்த்தை ஆரம்பித்து நீடிக்கப்பட்ட கடன் வசதியுடன் தொடர்புள்ள விஷயங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்.

அநுர குமார திசாநாயக்க

எனக்கு அதிகாரத்தைக் கையளிக்கையில் 'மாற்றம்' ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணக் கருவே மக்களிடத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது. மாற்றம் என நமது நாட்டு மக்கள் கருதுவது அரசியல் முறைமையில் காணப்படும் அனைத்து விதமான மோசமான பண்புகளை மாற்றுவதே ஆகும். தற்போது அது நிரூபணமாகியுள்ளது. இந்த நாட்டில் நடைபெற்ற அனைத்து விதமான தேர்தல்களையும் நோக்கினால், தேர்தலுக்குப் பின்னரான எந்த வன்முறைச் சம்பவமும் நடைபெறாத ஒரேயொரு தேர்தலாக நாம் வெற்றிபெற்ற இந்தத் தேர்தலை வரலாற்றில் இணைக்க முடிந்துள்ளது.

இது நமது நாட்டு மக்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. இந்நிலைமையை உறுதிப்படுத்தி நிலைப்படுத்துவது நமது நோக்கமாகும். அரசியலில் அதிகாரத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கும் அதற்காக வியூகம் அமைப்பதற்கும் எவருக்கும் உரிமையுள்ளது. அரசியல் செய்யும் நேரத்தில் அரசியல் செய்வதற்கும், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரத்தில் அதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் இந்த தருணத்தில் வலியுறுத்துகிறேன். அதற்கான தலைமைத்துவத்தை நாம் வழங்குகிறோம்.

சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பேர்கராக இருந்தாலும், மலேயராக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் 'நாம் இலங்கைப் பிரஜைகள்' என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறை சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை, இந்த நாடு தோல்வியடையுமே தவிர வெற்றியடையாது. அதற்காக அரசியலமைப்பு ரீதியான, பொருளாதார, அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒரு போதும் நாம் பின்வாங்க மாட்டோம்.

தனது இனம், தனது மதம், தனது வர்க்கம், தனது சாதி என இந்த நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம்.

இந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கும் செயல்படுத்தவும் செயல்திறன் மிக்க, நேர்மையான அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே நிறைவு செய்துள்ளோம். பொதுப் பணிக்கு இடையூறு ஏற்படாத மற்றும் பிரஜைகள் தொடர்பில் பாதகமான அழுத்தங்கள் ஏற்படாத வகையில் எதிர்பார்த்த மாற்றங்களைப் படிப்படியாக மேற்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணக்கருவை மீள உயிர்ப்பிப்போம்.

அநுர குமார திசாநாயக்க

இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே எனது எதிர்பார்ப்பு. அதற்கான நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது." என்று அனைத்து துறை சார்ந்த விஷயங்களையும் ஆய்ந்து உரையாற்றியவர், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வீதிகளில் வாகனங்கள் செல்லும் விதம், முதியோர்களை நடத்தும் விதம், விருந்தோம்பல் செய்யும் முறை, விலங்குகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதையும் உறுதிப்படுத்த முடியும். நம் நாட்டின் பிம்பத்தை அதே வகையில் தெளிவாகத் தெரியும் வகையில் கட்டியெழுப்ப நாம் திட்டங்களைத் தயாரித்து முடித்துள்ளோம். அந்த உருவாக்கத்திற்காகக் குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த நாட்டின் கடவுச்சீட்டை உலகமே மதிக்கும் நிலைக்கு, நாம் நாட்டை கட்டியெழுப்புவது அவசியம். இந்த நாட்டின் பிரஜைகளுக்கு 'நான் இலங்கையர்' என்று பெருமையுடன் கூறக் கூடிய நாட்டை உருவாக்குவது அவசியம். நாட்டில் ஐம்பத்திரண்டு சதவிகிதத்தைத் தாண்டி பெண்கள் சமூகம் இருந்தும் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பாக எடுக்கக் கூடிய நடவடிக்கைகளுக்கு நாம் செல்வோம். அதற்கான எனது அர்ப்பணிப்பின் முன்னுதாரணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஏற்கெனவே பிரதமர் பதவிக்குப் பெண் ஒருவரை நியமித்துள்ளோம்.

நாம் செல்லும் பயணத்தில் சமூக கட்டமைப்பின் எந்தவொரு பகுதியையும் கைவிடப்போவதில்லை. என் மீதான சந்தேகம் காரணமாக நிச்சயமற்ற நபர்கள் இருப்பதை நாம் அறிவோம். எனது செயற்பாடுகளின் ஊடாக உங்களின் நம்பிக்கையை வெல்ல முடியும் என்று எதிர்பார்க்கிறேன். உங்களுடைய விமர்சனங்களைப் பொருத்தமான தருணத்தில் ஏற்றுக்கொள்வேன். அதேபோல் நாங்கள் கட்டியெழுப்பப் போகும் எதிர்காலத்தின் பங்குதாரர்களாக உங்களை வலுவூட்டுவோம். எமக்கிடையில் காணப்படும் வேறுபாடுகளைக் கலைய முடியுமானால், நமக்கிடையிலான இலக்கு சமமானவை என நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.

அநுர குமார திசாநாயக்க

அரசியலமைப்புக்கு அமைவாக நாட்டை கொண்டு செல்வதற்காக எனது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு அமைவாக அமைச்சரவை ஒன்றை நியமித்தேன். சந்தர்ப்பவாதம், அதிகாரமோகம், சர்வாதிகாரம் மற்றும் இனவாதம் காரணமாக எனது நாட்டை மேலும் உயர்த்தி வைக்க என்னால் முடியாமல் உள்ளது. இருப்பினும், எனக்கு வரலாற்றில் நழுவவிட முடியாத சந்தர்ப்பமொன்று கிடைத்திருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்வகைத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் செழிப்பான நாட்டை கட்டியெழுப்புவோம். நன்றி." என்று பேசியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist