'விஜய் எங்கள் வீட்டு பையன்; அதிமுக தந்த கடிதத்தை நாகரிகம் கருதி..!' - கூட்டணி குறித்து பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் இன்று (ஜூன் 11) ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "தேர்தலுக்கான பணிகளை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். கட்சி நிர்வாகிகள், கழகம் மேம்பட எப்படி செயல்பட வேண்டும் என்று கலந்து ஆலோசித்தோம். எல்லா முடிவுகளையும் எடுத்தப் பிறகு நானும், விஜயபிரகாரனும் பிரசாரத்தை மேற்கொள்வோம். பிரேமலதா விஜயகாந்த்இப்போது கூற முடியாது நாங்கள் தனித்து போட்டியிடுகிறோமா? அல்லது கூட்டணி வைக்கிறோமோ? என்பதை இப்போது கூற முடியாது. தனித்து போட்டியிடுவோமா? என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும். நாங்கள் எத்தனையோ தேர்தல்களை, இடைத்தேர்தல்களைத் தனியாகவே களம் கண்டவர்கள். எல்லாவற்றிருக்கும் தயாராக இருக்கிறோம்.நாகரிகம் கருதி...மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக எழுதி தந்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடாமல் இருக்கிறோம். தற்போதைக்கு கட்சியின் வளர்ச்சியில்தான் கவனம் செலுத்த உள்ளோம். அதனால் கூட்டணி குறித்து உடனே கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது. விரைவில் அறிவிப்போம்" என்றிருக்கிறார். விஜய் - பிரேமலதா விஜயகாந்த்தேமுதிகவுடன் தவெக கூட்டணி வைக்குமா? என்ற கேள்விக்கு, "தேமுதிகவுடன் தவெக கூட்டணி வைக்குமா? என விஜயிடம்தான் கேட்க வேண்டும். இன்று அவர் அரசியல் கட்சி ஆரம்பித்து இருக்கலாம். நடிகராவதற்கு முன்பே அவர் எங்கள் வீட்டு பையன். அரசியல் நிலைப்பாடு குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும் " என்று பதிலளித்திருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Jun 11, 2025 - 15:59
 0  57
'விஜய் எங்கள் வீட்டு பையன்; அதிமுக தந்த கடிதத்தை நாகரிகம் கருதி..!' - கூட்டணி குறித்து பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் இன்று (ஜூன் 11) ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "தேர்தலுக்கான பணிகளை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.

கட்சி நிர்வாகிகள், கழகம் மேம்பட எப்படி செயல்பட வேண்டும் என்று கலந்து ஆலோசித்தோம். எல்லா முடிவுகளையும் எடுத்தப் பிறகு நானும், விஜயபிரகாரனும் பிரசாரத்தை மேற்கொள்வோம்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

இப்போது கூற முடியாது

நாங்கள் தனித்து போட்டியிடுகிறோமா? அல்லது கூட்டணி வைக்கிறோமோ? என்பதை இப்போது கூற முடியாது.

தனித்து போட்டியிடுவோமா? என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும். நாங்கள் எத்தனையோ தேர்தல்களை, இடைத்தேர்தல்களைத் தனியாகவே களம் கண்டவர்கள். எல்லாவற்றிருக்கும் தயாராக இருக்கிறோம்.

நாகரிகம் கருதி...

மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக எழுதி தந்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடாமல் இருக்கிறோம். தற்போதைக்கு கட்சியின் வளர்ச்சியில்தான் கவனம் செலுத்த உள்ளோம். அதனால் கூட்டணி குறித்து உடனே கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது. விரைவில் அறிவிப்போம்" என்றிருக்கிறார்.

விஜய் - பிரேமலதா விஜயகாந்த்
விஜய் - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவுடன் தவெக கூட்டணி வைக்குமா? என்ற கேள்விக்கு, "தேமுதிகவுடன் தவெக கூட்டணி வைக்குமா? என விஜயிடம்தான் கேட்க வேண்டும். இன்று அவர் அரசியல் கட்சி ஆரம்பித்து இருக்கலாம். நடிகராவதற்கு முன்பே அவர் எங்கள் வீட்டு பையன். அரசியல் நிலைப்பாடு குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும் " என்று பதிலளித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist