விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா: எலான் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்கிறார்
விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா என்ற தகவல் களஞ்சியத்தை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்கிறார். கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட விக்கிபீடியா உலகின் தகவல் களஞ்சியமாக செயல்படுகிறது.

வாஷிங்டன்: விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா என்ற தகவல் களஞ்சியத்தை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்கிறார். கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட விக்கிபீடியா உலகின் தகவல் களஞ்சியமாக செயல்படுகிறது. விக்கிமீடியா அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் விக்கிபீடியாவை நிர்வகித்து வருகிறது. இந்த தளம் சுமார் 300-க்கும் மேற்பட்ட மொழிகளில் தகவல்களை வழங்கி வருகிறது. சுமார் 6.5 கோடிக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
தற்போது விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா என்ற புதிய தகவல் களஞ்சியத்தை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில், “அடுத்த 2 வாரங்களில் குரோக்பீடியா தொடங்கப்படும்’’ என்று அறிவித்துள்ளார்.
What's Your Reaction?







