“மக்களின் பார்வை பற்றி கவலையில்லை” - துப்பாக்கிச் சூடு கொண்டாட்டம் குறித்து ஃபர்ஹான் விளக்கம்
இந்திய அணி உடனான ஆசிய கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் துப்பாக்கி சூடு செய்வது போல் சைகை செய்து அரைசதம் கடந்ததை பாகிஸ்தான் அணி வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் கொண்டாடினார்.

துபாய்: இந்திய அணி உடனான ஆசிய கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் துப்பாக்கிச் சூடு செய்வது போல் சைகை செய்து அரைசதம் கடந்ததை பாகிஸ்தான் அணி வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் கொண்டாடினார். அவரது கொண்டாட்டம் சர்ச்சையான நிலையில். அது குறித்து தனது கருத்தை ஃபர்ஹான் வெளிப்படுத்தி உள்ளார்.
“அந்த தருணத்தின்போது அதை நான் செய்திருந்தேன். நான் அரைசதம் கடந்தால் பெரிதும் கொண்டாட மாட்டேன். ஆனால், ஆட்டத்தின்போது திடீரென அப்படி செய்யலாம் என நான் எண்ணியதால் அதைச் செய்தேன். மக்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்றெல்லாம் நான் கருதவில்லை. அதுகுறித்து எனக்கு கவலையும் இல்லை. ஆக்ரோஷமான பாணியில் கிரிக்கெட் விளையாட வேண்டும். அது இந்திய அணிக்கு எதிராக மட்டுமல்ல, மற்ற அணிகளுடனும் அப்படித்தான் ஆட வேண்டும்” என ஃபர்ஹான் கூறியுள்ளார்.
What's Your Reaction?







